News
சஜித்தின் உயிருக்கு அச்சுருத்தல் ; வெளிநாட்டு புலனாய்வு பிரிவு தகவல்

சஜித்தின் உயிருக்கு அச்சுருத்தல் ; வெளிநாட்டு புலனாய்வு பிரிவு தகவல் வழங்கியுள்ளாதாக எதிர்க்கட்சியின் பிரதான கொரடா லக்ஸ்மன் கிரியல்ல சபாநாயகரிடம் முறைப்பாடு ..
எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் உயிருக்கு அச்சுருத்தல் உள்ளதாக வெளிநாட்டு புலனாய்வு பிரிவு தகவல் வழங்கியுள்ளாதாக எதிர்க்கட்சியின் பிரதான கொரடா லக்ஸ்மன் கிரியல்ல சபாநாயகரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பில் பொலிஸ் மா அதிபரை நேரடியாக அழைத்து கலந்துரையாடியுள்ள சபாநாயகர் எதிர்க்கட்சி தலைவரின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு கோரியுள்ளார்.
மேலும் அங்கு கருத்து வெளியிட்டுள்ள பொலிஸ் மா அதிபர் இலங்கை பாதுகாப்பு தரப்பிற்கு இது தொடர்பில் எந்த தகவலும் கிடைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

