கல்முனையில் சிவில் பொது அமைப்புகள் மற்றும் சுயேட்சைக் குழுகள் ஒன்றினைந்து அனுரவின் தேசிய மக்கள் சக்தியை ஆதரிக்க முடிவு

கல்முனை தொகுதியில் உள்ள சிவில் பொது நிறுவனங்கள், சமூக மட்ட அமைப்புக்கள்,மகளிர் சங்கங்கள்,விளையாட்டு கழகங்கள்,இளைஞர் அமைப்புக்கள் மற்றும் இம்முறை தேர்தலில் போட்டியிடும் அனைத்து சுயேட்சைக் குழுக்களும் ஒன்றினைந்து எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் கல்முனையில் தேசிய மக்கள் சக்தியை ஆதரிப்பதாக இன்று ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது.
சுயேட்சைக் குழு 21 கைக்கோடாரி சின்னத்தில் போட்டியிடும் இளம் தொழிலதிபர்கள் தலைமையிலான சுயேட்சை குழுவின் ஏற்பாட்டில் (03) கல்முனை ஆசாத் தனியார் மண்டபத்தில் இடம்பெற்ற பெரும்திடலான மக்கள் கலந்து கொண்ட மாபெரும் கூட்டத்தில் ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது.
இக் கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸுக்கு எக்காரணம் கொண்டு வாக்களிப்பதில்ல என்றும் கல்முனை பிரதேச செயலக பிரச்சினை,கல்முனையின் இருப்பு அதன் பாதுகாப்புக்கும், இலஞ்சம் ஊழலற்ற மக்கள் ஆதரவு கொண்ட தேசிய மக்கள் சக்திக்கு நாம் எல்லோரும் ஒன்றுமையாக வாக்களிப்பது காலத்தின் தேவையாகும் என்று அக் கூட்டத்தில் ஒன்றுகூடிய பொதுமக்கள் எல்லாரும் கட்சி பேசம் இன்றி ஒன்றுமையாக முடிவெடுத்தனர்.
இக் கூட்டத்தில் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள்,பள்ளிவாசல்களின் தலைவர்கள்,அரசியல் பிரமுகர்கள் என பெரும்திரலான மக்கள் கலந்து கொண்டனர்

