News
ரனில் போட்ட 50 ரூபா சீனி வரி நீடிக்கப்பட்டது..
விசேட வர்த்தக வரியின் கீழ் விதிக்கப்பட்டுள்ள 50 ரூபா வரியை மேலும் நீடிக்க ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தீர்மானித்துள்ளார்.
இதன்படி, 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட சரக்குகள் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க இது தொடர்பான வரிகள் நீடிக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில், ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் நீடிக்கப்பட்டது 2023 நவம்பர் 1ஆம் திகதி முதல் ஒரு வருட காலத்திற்கு அதாவது 2024 நவம்பர் 1ஆம் திகதியுடன் முடிவடையும் வகையில் நிர்ணயிக்கப்பட்ட வரியாகும்.
எனினும் இதனால் சந்தையில் சீனி விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படாது வர்த்தகர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.