News
ரனில் விக்ரமசிங்க பொதுவேட்பாளாராக பொது சின்னத்தில் போட்டியிடுவார்
ரனில் விக்ரமசிங்க பொதுவேட்பாளாராக பொது சின்னத்தில் போட்டியிடுவார் என முன்னாள் கல்வி அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் செயலாளருமான அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி தேரதலை அறிவிக்கும் அதிகாரம் இன்று 17 நள்ளிரவு முதல் தேர்தல் ஆணைக்குழுவிற்கு சென்றுள்ள நிலையில் ஜனாதிபதி தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
எதிர்வரும் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என மொட்டு கட்சி இதுவரை அறிவிக்காத நிலையில் ரனில் விக்ரமசிங்க பொதுவேட்பாளாராக பொது சின்னத்தில் போட்டியிடுவார் என முன்னாள் கல்வி அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் செயலாளருமான அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.