கிங் சல்மான் நிவாரண மையத்தின் உதவியுடன் இலங்கை தென் மாகாணத்தில் ஏராளமான நோயாளிகளுக்கு கண் அறுவைச் சிகிச்சை உள்ளிட்ட பல மருத்துவ உதவிகள் இலவசமாக வழங்கப்பட்டன

நிவாரணம் மற்றும் மனிதாபிமான உதவிக்கான கிங் சல்மான் மையம் இலங்கையின் தென் மாகாணத்தில் உள்ள வல்சமுல்ல பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் கண்பர்வை இன்மை மற்றும் நோய்களை எதிர்த்துப் போராடும் நூர் சவுதி தன்னார்வத் திட்டத்தை திங்கள்கிழமை (நவம்பர் 04) செயல்படுத்தியது.
இலங்கையில் உள்ள சவுதி தூதரகத்தின்படி, தன்னார்வத் திட்டம் நவம்பர் 04-09 வரை மருத்துவமனையில் நடத்தப்படும்.
இந்த திட்டத்தில் ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்து அவர்களுக்கு மருத்துவ சேவைகள் வழங்குவதுடன், அவர்களுக்கு மருந்து, கண்ணாடி மற்றும் லென்ஸ்கள் வழங்குவதுடன், சுகாதார விழிப்புணர்வை வழங்குவதும் அடங்கும்.
செவ்வாய்க்கிழமை (நவம்பர் 05), நோயாளிகளுக்கு 4500 மருத்துவ பரிசோதனைகள், 600 கண்ணாடிகள் விநியோகம் மற்றும் 115 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன.
தென் மாகாணத்தில் தன்னார்வ செயற்றிட்டத்தை முன்னெடுப்பதற்கு முன்னதாக, இவ்வருடம் மே மாதம் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் காத்தான்குடி பிரதேசத்தில் நடத்தப்பட்டது.
சவூதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான சிறப்பான உறவுகள் மற்றும் உலகெங்கிலும் உள்ள நாடுகளின் துன்பங்களைப் போக்க சவுதி அரேபிய இராச்சியத்தின் ஆர்வத்தின் அடிப்படையில் இந்த திட்டம் தொடங்கப்படுகிறது.
அதன்படி, நூர் சவூதி தன்னார்வத் திட்டத்தில் ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்து அவர்களுக்கு மருத்துவ சேவைகள், மருந்துகள், கண்ணாடிகள் மற்றும் லென்ஸ்கள் வழங்குவதுடன், அவர்களுக்கு சுகாதார விழிப்புணர்வை வழங்குவதும் அடங்கும்.
இந்த திட்டம் இலங்கை உட்பட அனைத்து நாடுகளிலும் நிவாரணம் மற்றும் மனிதாபிமான உதவிக்கான கிங் சல்மான் மையம் ஏற்பாடு செய்த திட்டங்களின் விரிவாக்கமாகும்.
மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பார்வைக் குறைபாடு மற்றும் அதை ஏற்படுத்தும் நோய்களை எதிர்த்துப் போராடுவதற்கான இலவச சவூதி நூர் தன்னார்வத் திட்டம் தென் மாகாணத்தில் வலஸ்முல்லை பகுதியில் கடந்த 2024, நவம்பர் மாதம் 7ஆம் திகதி வியாழக் கிழமையன்று இலங்கைக்கான சவூதி தூதர் காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி அவர்களால் அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வானது, 2024 நவம்பர் 4 ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் நடைபெற்று நிறைவுக்கு வந்தது.
இந் நிகழ்வின் போது வலஸ்முல்ல ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற உத்தியோகபூர்வ வைபவத்தில் தூதுவர் காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி அவர்கள், “சவூதி அரேபியா மற்றும் இலங்கைக்கு இடையிலான சிறந்த உறவுகள் மற்றும் சவூதியின் மனிதாபிமான உதவிகளுக்கான ஆர்வத்தின் அடிப்படையிலும், சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சவுத் மற்றும் பட்டத்து இளவரசர் மற்றும் பிரதமர் முஹம்மத் பின் சல்மான் அல் சவுத் தலைமையில் சவூதி அரேபியா, இலங்கை உட்பட உலகெங்கிலும் உள்ள குறைந்த வருமானம் பெறும் மக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நிவாரணம் அளிக்கும் நோக்கத்திலும், மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம் தென்னிலங்கையின் வலஸ்முல்லை பகுதியில் பார்வைக்குறைவை எதிர்த்துப் போராடும் தன்னார்வத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது” என தெரிவித்தார்.
ஆயிரக்கணக்கான கண் சம்மந்தப்பட்ட நோய்களைக் கண்டறிதல், அவற்றுக்கு தக்க சிகிச்சை வழங்குதல், அறுவை சிகிச்சை, இதர சிகிச்சைகள், மருந்துகள், கண்புரை (cataract) அகற்றுதல் மற்றும் அறுவை சிகிச்சை, தடுக்கப்பட்ட கண்ணீர் குழாய்களுக்கு சிகிச்சையளித்தல், நோயாளிகளுக்கு மருந்துகள், கண்ணாடிகள் மற்றும் லென்ஸ்கள் ஆகியவற்றை வழங்குதல் அத்தோடு நோயாளிகளுக்கான விழிப்புணர்வை வழங்குதல் ஆகியவை இத்திட்டத்தில் அடங்கும் எனவும் தூதுவர் அவர்கள் குறிப்பிட்டார்.
மேலும் தூதுவர் அவர்கள், சவூதியின் தலைமைகளான மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சவுத் மற்றும் பட்டத்து இளவரசர், பிரிதமர் முஹம்மத் பின் சல்மான் அல் சவுத் ஆகியோருக்கும், மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம், அல்-பசார் சர்வதேச அறக்கட்டளை,வெளிவிவகார அமைச்சு, இலங்கை சுகாதார அமைச்சு, செய்லான் முஸ்லிம் இளைஞர்களுக்கான அமைப்பு (AMYS), வலஸ்முல்லை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் மற்றும் ஊளியர்களுக்கு இந்த வேலைத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கான முயற்சிகளுக்காக நன்றியையும் தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது வலஸ்முல்லை மருத்துவமனையின் பணிப்பாளர் வைத்தியர் முஹம்மத் இப்ராஹிம் சிராஜ் அவர்கள் தனது உரையில், நீண்ட காலமாக இரு நாடுகளுக்கும் இடையிலான சிறப்பான உறவுகளை பிரதிபலிக்கும் வகையில் இலங்கை குடியரசிற்கு இந்த மனிதாபிமான உதவியை வழங்கியதற்காக சவூதி அரேபியாவின் மன்னர் மற்றும் பட்டத்து இளவரசருக்கு நன்றிகளைத் தெரிவித்தார். அத்தோடு அனைத்து துறைகளிலும் இரு நாடுகளுக்குமிடையேயான சிறப்பான உறவுகளை அதிக அளவில் வலுப்படுத்துவதில் தூதர் காலித் பின் ஹமூத் அல்கஹ்தானியின் முயற்சிகளை அவர் பாராட்டினார். பல்வேறு துறைகளில், குறிப்பாக இலங்கையில் சுகாதாரத் துறையில் 15க்கும் மேற்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும், சுனாமி பேரழிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விநியோகிப்பதற்காக 500 வீட்டுத் தொகுதிகளை கிழக்கு இலங்கையில் நிர்மாணிப்பதற்கும் சவூதி அபிவிருத்திக்கான நிதியத்தின் ஊடாக இராச்சியம் வழங்கிய உதவிகளையும் அத்துடன் மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம் வழங்கிய மனிதாபிமான உதவிகளை மருத்துவர் குறிப்பிட்டார். இந்த அனைத்து முயற்சிகளுக்கும் இராச்சியத்தின் அரசாங்கத்திற்கு தனது நன்றியையும் நன்றியையும் தெரிவித்த அவர், இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த உறவுகள் தொடர விரும்புவதாகவும் தெரிவித்தார்.
நவம்பர் 4 முதல் 9, 2024 வரையான காலப்பகுதியில் வலஸ்முல்லை ஆதார மருத்துவமனையில் மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையத்தால் செயல்படுத்தப்பட்ட இந்த இலவச மருத்துவ நிகழ்வின் போது, நோயாளிகளுக்கு பின்வருமாறு சிகிச்சை அளிக்கப்பட்டது:
• மருத்துவ பரிசோதனைகள்: 4,500
• அறுவை சிகிச்சைகள்: 503
• கண்ணாடி விநியோகம் : 600
மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம் நவம்பர் 10 முதல் 16 வரையிலான காலப்பகுதியில் காத்தான்குடி பகுதியில் பார்வைக்குறைவை எதிர்த்து மற்றொரு மருத்துவ முகாமை செயல்படுத்துத்த இருக்கிறது. இந்த நிகழ்வு 6,000 நோயாளிகளை பரிசோதிக்கவும், 600 க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 600க்கும் மேற்பட்ட கண்ணாடிகள் தேவைப்படுபவர்களுக்கு கண்ணாடிகளையும் மருந்துகளை விநியோகிக்க இருக்கிறது. இந்த மருத்துவத் திட்டங்களைச் செயல்படுத்துவதைத் தொடர்ந்து அதனை தூதரகம் மேற்பார்வையிடுவதும் குறிப்பிடத்தக்கது.
His Excellency Ambassador Khalid bin Hamoud Alkahtani launched the free Saudi Noor volunteer program to combat blindness and related diseases, which is organized by the King Salman Humanitarian Aid and Relief Center in the Republic of Sri Lanka in “Walasmulla” area, in the presence of a number of government officials in the region. All the participants appreciated the humanitarian efforts and medical programs implemented by the Kingdom of Saudi Arabia through the Center.















