பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள அலி சப்ரி ரஹீம் M.P, பகிரங்கமாகவே விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சம்பவம்
கல்பிட்டி சுற்றுலா நீதவான் நீதிமன்றில் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் நேற்று (16) கல்பிட்டி அல் அக்ஷா தேசிய பாடசாலையில் இடம்பெற்ற வைபவமொன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
கல்பிட்டி நகரில் கௌரவ வரவேற்புடன் பொலிஸ் உத்தியோகத்தர் ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினரை விழா மைதானத்திற்கு அழைத்துச் செல்வதைக் காணக்கூடியதாக இருந்தது.
கல்பிட்டியில் உள்ள அரச சார்பற்ற நிறுவனமொன்றினால் புத்தளம் நீதவான் நீதிமன்றத்திற்கு ஒதுக்கப்பட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது பாராளுமன்ற உறுப்பினர் மூன்று தடவைகள் நீதிமன்றத்தை தவிர்த்துள்ளார்.
சட்டத்தரணி அல்லது எம்.பி. சார்பில் ஆஜராகாமல் நீதிமன்றத்தை தவிர்த்ததன் அடிப்படையில் உடனடியாக பாராளுமன்ற உறுப்பினரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு மேலதிக மாவட்ட நீதிபதியும் நீதவானுமான திருமதி அயோனா விமலரத்ன கல்பிட்டி பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
பிடியானை பிறப்பிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பகிரங்கமாக நடந்துகொண்டமை தொடர்பில் கல்பிட்டி பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி இன்ஸ்பெக்டர் வசந்த சிறி லால் எதிரிசிங்கவிடம் நாங்கள் கேட்டோம்…
பாராளுமன்ற உறுப்பினர் இதுவரை நீதிமன்றில் ஆஜராகவில்லை எனவும் அவர் விரைவில் ஆஜராவார் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் வடமேற்கு மாகாண ஆளுநர் அஹமட் நசீர் அவர்களும் கலந்துகொண்டார்.