எமது எதிர்கால தலைமுறைக்கான ஒரு நாட்டை கட்டியெழுப்பும் ஒரு கூட்டு முயற்சியில் நம் நாட்டு மக்கள் இறங்கி விட்டனர்… தெஹியங்க, முருதலாவ மக்கள் சந்திப்பில் NPP வேட்பாளர் ரியாஸ் பாரூக் தெரிவிப்பு
எமது எதிர்கால தலைமுறைக்கான ஒரு நாட்டை கட்டியெழுப்பும் ஒரு கூட்டு முயற்சியில் நம் நாட்டு மக்கள் இறங்கி விட்டனர்… தெஹியங்க, முருதலாவ மக்கள் சந்திப்பின் போது கண்டி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 11ம் இலக்கத்தில் போட்டியிடும் சகோதரர் றியாஸ் பாரூக் தெரிவித்தார்*
இவ்வளவு காலமும் அவர்கள் சொல்லும் கட்சிக்கே வாக்களித்தீர்கள்.
பிரமான்ட மேடை அமைத்து பேசினார்கள், கட்சிக்கு கட்சியும் தாவினார்கள், பலருடனும் கூட்டும் சேர்ந்தார்கள், எமது நாடு அதால பாதாலத்துக்கு செல்லும் போதும் அவர்களோடுதான் இருந்தார்கள், எமது கடை, வீடுகள் நொருக்கப்படும் போதும், ஜனாஸாக்கள் எரிக்கப்படும் போதும் அவர்களோடு கை கோர்த்து பேச முடியா மெளனிகளானார்கள். இந்த நாடு இனவாதத்தாளும், ஊழலாலும் , ஏமாற்றுப் பேர்வழிகளாளும் சூறையாடப்பட்ட இருண்ட உலகத்தை விட்டு மீள நினைக்கிறது.
இனியும் அவர்களோடு பயனிக்க எமது சமூகம் தயாரில்லை என்பதை ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் எமக்குக் காட்டுகின்றன.
எமது எதிர்கால தலைமுறைகளுக்கான ஒரு நாட்டை கட்டியெழுப்பும் ஒரு கூட்டு முயற்சியில் நாட்டு மக்கள் இறங்கி விட்டனர்.
இத்தருணத்தில் வாக்குகளை சிதரடித்து ஆளும் கட்சியின் பிரதிநிதித்துவத்தை கண்டி மாவட்டத்தில் இல்லாமல் செய்வதற்கு போலியான, உணர்வு பூர்வமாண பொய்ப் பிரச்சாரங்கள் மூலம் பாரிய முயற்சிகளும் மேல்கொன்னப்பட்டு வருகின்றன. இதைத்தான் அவர்களின் அரசியல் கலாச்சாரமாக
காலா காலமாக செய்து வருகிறார்கள்.
எனவே இனியும் சுயநல அரசியல் வாதிகளின் வலைகளில் சிக்குவதற்கு மக்கள் வாக்களிக்கப் போவதில்லை, என்று தெஹியங்க, முருதலாவ மக்கள் சந்திப்பின் போது கண்டி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 11ம் இலக்கத்தில் போட்டியிடும் சகோதரர் றியாஸ் பாரூக் தெரிவித்தார்.