News
இஸ்ரேலுக்கு வேலைக்கு சென்ற இலங்கையரை நாடு கடத்த இஸ்ரேல் அதிகாரிகள் எடுத்த முயற்சி தோல்வி…. டெல் அவிவ் விமான நிலையத்தில் இருந்து எஸ்கேப் ஆனவரை தேடி வலைவீச்சு
இஸ்ரேலிலிருந்து நாடு கடத்துவதற்காக அழைத்துச் செல்லப்பட்ட இலங்கையர் ஒருவர் அந்த நாட்டின் டெல் அவிவ் விமான நிலையத்தில் வைத்துத் தப்பிச் சென்றுள்ளார்.
இரண்டு வாரங்களாக பணிக்கு வராதமை மற்றும் ஏனைய இலங்கையர்களுக்கு அழுத்தம் கொடுக்க முயன்றமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் குறித்த நபரை நாடு கடத்துவதற்கு முயன்றதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
மினுவாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நபரைக் கைது செய்வதற்கு இஸ்ரேலிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.