அநுர அரசாங்கத்தில் பாலியல் லஞ்சம் வேரோடு பிடுங்கப்படும்
கலாபூஷணம் பரீட் இக்பால்
புதிய ஜனாதிபதி கெளரவ அநுர குமார திஸாநாயக்க அரசாங்கத்தில் லஞ்சத்தை வேரோடு பிடுங்க லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவானது லஞ்சம், ஊழலை ஒழிப்பது தொடர்பாக அரச நிறுவனங்களின் பிரதான அதிகாரிகள் பாலியல் லஞ்சத்தையும் ஒழிக்க கவனம் எடுத்துள்ளனர்.
லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் இந்த முயற்சியானது பாராட்டத்தக்கது.
பாலியல் லஞ்சம் விடயமாகவும் லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினர் கூடிய கவனம் செலுத்த, சமுதாயத்தை கலாசார சீரழிவிலிருந்து பாதுகாக்க அநுர அரசாங்கம் தயாராகிவிட்டது..
மேற்கத்திய நாடுகளில் மாணவர்களின் பாடசாலை அனுமதியின்போது தாய்மார்களிடம், பெண்களின் அரச, தனியார் தொழில் நியமனங்களுக்கும், பெண்களின் பதவி உயர்வுகளுக்கும், பெண்களின் இடமாற்றங்களுக்கும் பல்கலைக்கழகங்களிலும் சிறையில் இருக்கும் கைதிகளை பார்வையிடச் செல்லும் பெண்களிடமும் மறைமுகமாக பாலியல் லஞ்சம் கோரப்படுகின்றது. இந்தியாவிலும் இதே நிலைமைதான். இதனால் சமூக கலாசார சீரழிவுகள் ஏற்படுகின்றன. பெண்களை தாய்க்குலமாக மதிக்கும் எமது நாடான இலங்கை நாட்டிலும் பாலியல் லஞ்சம் மறைமுகமாக கோரும் அபாயம் அதிகரித்துள்ளது. இது மிகவும் வேதனைக்குரிய விடயமாக இருக்கிறது. இந்த சமூக கலாசார சீரழிவுகளிலிருந்து பாதுகாப்பதற்கு பெண்களின் நிலையில் மறுமலர்ச்சி ஏற்படுத்துவதற்காக உழைக்கும் நிறுவனத்தினரும் மகளிர் விவகாரத்திற்கென செயற்படும் அமைச்சின் உத்தியோகத்தர்களும் லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினருக்கு உதவியாக இருத்தல் வேண்டும்.
பௌத்த, இந்து, இஸ்லாமிய விவகார அமைச்சுக்களும் இந்த விடயத்தில் அதிக கரிசனை காட்ட வேண்டும் பாலியல் லஞ்சத்தை ஒழிக்க விசேட தனிக்குழு குழு அமைத்து மதகலாசார சீரழிவிலிருந்து பெண்களை பாதுகாக்க அரசு முன் வந்துவிட்டது. ஜனாதிபதி அநுர அரசாங்கத்தில் லஞ்சத்தை ஒழித்துக் கட்டுவது பாராட்டத்தக்க விடயமாகும். பாலியல் இலஞ்சம் கடந்த அரசாங்கத்தில் பல அரங்கேறியிருக்கின்றன், வெளிச்சத்திற்கு வரவில்லை. தற்போது பாடசாலையில் புதிய மாணவர்கள் அனுமதி காலமாகவிருப்பதால் இம்முறை புதிய அரசாங்கமான அநுர அரசாங்கத்தில் பாலியல் லஞ்சம் முற்றாக ஒழிக்கப்படும் என நம்புகிறோம்.
*கலாபூஷணம் பரீட் இக்பால்
*யாழ்ப்பாணம்