News

எந்த ஒரு கட்டத்திலும் அரசாங்கத்தை பொறுப்பேற்க தயார் என திலித் ஜயவீர அறிவிப்பு

துணிச்சலான எதிர்கட்சியின் அதிகாரத்தை கோரினாலும், எந்தவொரு சவாலான சூழ்நிலையிலும் சர்வஜன அதிகாரம், அரசாங்கத்தை பொறுப்பேற்க தயாராக இருப்பதாக அக்கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

அம்பலாந்தோட்டையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“அனுபவம் உள்ளவர்களையே பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என எமது முன்னாள் ஜனாதிபதி தற்போது கூறுகின்றார்.

நிறைய அனுபவம் உள்ளவ அவர் அவரின் கட்சியையே அழித்தவர். ஏனைய பழைய அனைத்து கட்சிகளையும் அழித்தார்.

அதேநேரம், ஹந்துன்நெத்தி, லால் காந்த, விஜித, டில்வின், எனது நண்பர்களே, அவர்களை ஞாபகப்படுத்தவே இந்தப் பெயர்களைக் குறிப்பிடுகிறேன்.

தகுதியானவர்கள் பலர் உள்ளனர், அவர்கள் அனைவரும் வரிசையில் பின்னால் உள்ளனர். ஆனால் முன்னால் ஹரிணியே இருக்கிறார்.

ஹரிணி பிரதமராக்கினால் இலங்கையில் உள்ள ரணிலின் அரசு மாறாது.

எனவே அழிவின் வாய்க்கு சென்ற இலங்கை அரசியலை அன்புடன் இணைக்கக்கூடிய அரசியலை உருவாக்குவதே இன்று நாம் செய்து வருகின்றோம்.

சர்வஜன அதிகாரத்தின் பதக்க சின்னத்திற்கு முன்னால் 14 ஆம் திகதி புள்ளடியிடுங்கள்.

அதன்பிறகு துணிச்சலான எதிர்கட்சியை உருவாக்கலாம்” என்றார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button