News
மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆண் மற்றும் பெண் மீது இனந்தெரியாதவர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் இருவரும் பலி
அம்பலாங்கொட ஊராவத்தையில் துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் (ஆண் மற்றும் பெண்) மீதே குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் மற்றொரு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்…
பின்னர் வெளியான மேலதிக தகவல்களின் படி,
சுட்டுக்கொல்லப்பட்ட பெண்ணும் ஆணும் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர் எனவும் இவர்கள் அம்பலாங்கொடை, குளிகொட பிரதேசத்தில் வசிக்கும் 46 வயதுடைய தம்பதிகள் எனவும், உயிரிழந்த பெண்ணும் ஆணும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தற்போதைய விசாரணையின்படி, டி 56 ரக துப்பாக்கியால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.