News

இந்த சூழலில், NPP என்ற ஒரே காரணத்திற்காக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளர்களுக்கு எந்த நிலைப்பாட்டில் வாக்களிப்பது?”

@NPP யின் கொள்கை நிலைப்பாடுகளிலும் உறுதிமொழிகளிலும் பல தெளிவான பிறழ்வுகள், சந்தேகங்கள் பரவலாக ஏற்பட்டு வரும் இந்த சூழலில், NPP என்ற ஒரே காரணத்திற்காக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளர்களுக்கு எந்த நிலைப்பாட்டில் வாக்களிப்பது?”

தேர்தலை தொடர்ந்து வரவுள்ள புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்திற்கு பொருத்தமானவர்களை, துறைசார் அறிவார்ந்தவர்களை கட்சி அரசியலுக்கு அப்பால் NPP க்கு வெளியிலிருந்து நாம் தெரிவு செய்யவும் வேண்டும்.

2022 ம் ஆண்டு இந்த நாட்டில் நடைபெற்று வெற்றிபெற்றிருந்த “அறகல” போராட்டமானது இந்த நாட்டின் ஆட்சிமாற்றத்திற்கு வித்திட்டு அதன் தொடரில் ஏற்பட்ட முதலவாது மாற்றமாக ஜனாதிபதியாக அநுர குமாற அவர்கள் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்கள். இதன் தொடர்ச்சியில் பாராளுமன்றத்திலுள்ள 225 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக மக்களாகிய நாம் இந்த இரண்டாவது மாற்றத்திற்கு தயாரிகிக்கொண்டு நவம்பர் 14 ம் திகதி வாக்களிக்கவுள்ளோம்.

இதற்கமைவாக நடைபெற்ற அறகல போராட்டத்தை NPP யினர் மாத்திரம் தனக்கானது என உரிமை கோரவும் முடியாது காரணம், பல முற்போக்கான கட்சிகள், அமைப்புக்கள் என பலர் இப் போராட்டத்தை துவக்கிவைத்திருந்தனர். அதே போன்று NIO என்று சொல்லக்கூடிய “தேசிய புத்தி ஜீவிகள் அமைப்பே”NPP யை உருவாக்கியிருந்தது. எவ்வாறு 2015 ம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்க மறைந்த மாதுலுவாவ சோபித்த தேரர் அவர்களின் சமூக நீதிக்கான அமைப்பு பங்களித்து மைத்திரியை ஜனாதிபதியாக்க முயன்றார்களோ. இதேபோன்று NIO என்ற அமைப்பு NPP ஐ உருவாக்கி அரசியல் ரீதியாக முன்நகர்த்த இணைத்துக் கொள்ளப்பட்ட கட்சியே JVP ஆகும்.

JVP யானது வேறு கட்சி சார்பானவர்களை, ஏனைய கட்சிகளில் தலைமைப் பொறுப்பை கொண்டிருப்பவர்கள் தனிநபர்களாக இணைபவர்களைக் கூட NPP யில் வேட்பாளர்களாக நிறுத்துவதில் இறுக்கமான நடைமுறைகளை பின்பற்றிருந்தார்கள் என்பது ஆரம்பத்தில் இருந்தே நாம் அறிந்திருந்து கொண்டுள்ளோம்.

ஜனாதிபதியின் உரைகளை அவதானிக்கும் போது இன்னும் மூன்று மாதங்களுக்குள் அரசியல்யாப்பு ஒன்றை கொண்டுவருவதற்கு உத்தேசித்து இருப்பதாகவும் கூறி இருந்தார். இவ்வேளையில் எத்தகைய வடிவிலான அரசியல்யாப்பு அறிமுகம் செய்யப்படும் என்பது இன்றுவரை தெளிவின்மையாக இருக்கிறது காரணம் கடந்த காலங்களில் கூட பல அரசியலமைப்பு மாதிரி முன்மொழிவுகளும் பலரால் முன்வைக்கப்பட்டும் இருக்கின்றன.

அரசியலமைப்பு உருவாக்கம் என்பதை நாம் சாதாரணமாக இலகுவாக கடந்துவிடமுடியாது என்ற நிலையில் அமையவுள்ள பாராளுமன்றத்தில் புதிய உறுப்பினர்கள் வரவேண்டும் என்ற நிலைப்பாடு சிலவேளை ஆபத்தானதாகவும் அமையலாம். இச்சூழ்நிலையில் ஒரு கட்சிக்கு 2/3 பெரும்பான்மை பலத்தை வழங்குவதும் அரசியல் கண்ணோட்டத்தில் பொருத்தமானதல்ல என்பதனையும் நாம் வாக்களிப்பதற்கு முன்பு சிந்திக்கவும் கடமைப்பட்டுள்ளோம்.

அதேநேரம் NPP வேட்பாளர்களின் உரைகளை அவதானிக்கும் போது NPP நிறைவேற்றுக் குழுவை அல்லது அக்கட்சியின் உயர் பீடத்தை தாண்டி அவர்களால் முடிவுகளை எடுத்து செயற்பட முடியாது என்ற நிலை தெளிவாகவும் தெரிகிறது. அவர்கள் வாக்குகளை சேகரித்து கொடுக்கின்ற முகவர்கள் மாத்திரமே எனவும் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில்,

கொள்கையொன்றுக்காக இவ்வளவு காலம் வாக்களித்து வந்தவர்களின் மாற்றுத் தீர்வு என்ன?

அரசியலை சமூகக் கடமையாக எண்ணி இவ்வளவு காலமும் வாக்களித்து வந்தவர்கள் இம்முறை பாராளுமன்ற தேர்தலில் முற்போக்குடன் யாருக்கு வாக்களிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு சமூகமட்டத்தில் நிலவுகிறது. அல்லது அவ்வாறானவர்களின் வாக்களிப்பு எவ்வாறு அமையலாம்?

தற்போதுள்ள இலங்கை அரசியல் சூழலில் NPP க்கான அலை தாராளமாக மாற்றுத் தீர்வை முன்வைத்த பல கோசங்களுடன் எம் முன் இருக்கிறது. என்றாலும் NPP யின் பல நிலைப்பாடுகளில் அவர்கள் தேர்தலுக்கு முன்பும், பின்பும் முன்னுக்குப்பின் முரணான விடயங்களை தற்போது முன்வைக்கத் துவங்கியுள்ளனர்.

இதனால்,

1.போட்டியிடுகின்ற NPP தவிர்ந்த வேறு கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பொருத்தமான, நல்லவர்களுக்கு, அல்லது குறைவான தீமை எது என்று பார்த்து எமது வாக்குகளை அவ்வாறானவர்களுக்கு வழங்கலாம் என்பதனையும் வாக்களிக்கும் போது பொறுப்புணர்வுடன் நாம் பார்க்கவும் வேண்டும்.

  1. தேசிய ரீதியில் வாக்குகளை கோருகின்ற முற்போக்கான அணியினருக்கு எமது வாக்குகளை வழங்கலாமா? அதன் மூலமும் பொருத்தமான பிரதிநிதிகளை பாராளுமன்றத்திற்கு அனுப்புவதற்கு எனது வாக்கு பங்களிப்புச் செய்யுமா? என்ற திருப்தியில் வாக்களிக்கலாம் என்ற ஒரு நிலையும் இருக்கிறது அவற்றையும் கருத்திற் கொண்டு வாக்களிக்கலாம்.

இவ்வாறான மாற்றீடுகளுடன் கூடிய மாற்றுத் தீர்வுகளை ஆராய்ந்து எமது வாக்குகளை பொருத்தமானவர்களுக்கு வழங்குவதோடு பலமான நேர்மையான, ஊழலற்ற எதிர்கட்சியை உருவாக்குவதற்கும், ஆளும்கட்சியின் நல்ல விடயங்களுக்கு பங்களிப்பு வழங்குவதற்காகவும் எமது வாக்குகளை நாம் பயன்படுத்தலாம்.

MLM.சுஹைல்

Recent Articles

Back to top button