அப்பாவி பொதுமக்களை கொன்ற ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான முக்கிய செய்திகளை எதிர்வரும் நாட்களில் எதிர்பாருங்கள் ; ஜனாதிபதி தெரிவிப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து அடுத்த சில நாட்களில் குறிப்பிடத்தக்க தகவல்கள் வெளியாகலாம் என ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சிறந்த செய்தியை அடுத்த சில நாட்களில் எதிர்பாருங்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க, ரக்பிவீரர் வாசிம் தாஜூதீன் படுகொலைகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வேன் என ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க உறுதியளித்துள்ளார்.
லசந்தவிக்கிரமதுங்க வாசிம்தாஸ்ரீஜூதீன் பிரகீத் எக்னலிகொட விவகாரங்கள் குறித்து விசாரணை செய்து அதற்கு காரணமானவர்களை அரசாங்கம் நீதியின் முன் நிறுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.
தம்புள்ளையில் தேர்தல் பேரணியில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அவர் அரசியல் அதிகாரம் படைத்தவர்களால் அப்பாவி மக்கள் கொல்லப்படும் யுகத்தை முடிவிற்கு கொண்டுவருவோம் என தெரிவித்துள்ளார்.
அனைவரினதும் உயிர்களும் பெறுமதியானவை என அவர் தெரிவித்துள்ளார்.