அனைத்தும் மக்களை ஏமாற்றும் நாடகம்.

இந்த அரசும் இனவாதமாக செயற்பட்டால் அதை எதிர்கும் முதல் குரல் என்னுடையாதாக இருக்கும் -இம்ரான்
இந்த அரசும் இனவாதமாக செயற்பட்டால் அதை எதிர்கும் முதல் குரல் என்னுடையாதாக இருக்கும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார் தோப்பூரில் நேற்று (10) இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்
தொடர்ந்தும் உரையாற்றிய அவர்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் என்பது மக்கள் மத்தியில் குரோதத்தை விதைத்து உருவாக்கப்பட்ட அரசாங்கம்.பொய்களின் மேலே ஊழலற்ற அரசாங்கம் எனும் முலாம் பூசி மக்களை ஏமாற்றி மக்கள் மத்தியில் குரோதத்தை விதைத்தார்கள்
அவர்கள் கூறிய பொய்கள் தற்போது ஒவ்வொன்றாக வெளிச்சத்துக்கு வருகிறது.ஆட்சிக்கு வந்த உடனே முட்டை விலை குறைந்ததும் தற்போது கொமிஸ் எடுக்க அமைச்சர் இல்லை அதனால்தான் தாம் ஆட்சிக்கு வந்ததும் முட்டை விலை குறைந்ததாக கூறினர்.மீண்டும் ஒரு கிழமைக்குள் முட்டை விலை கூடியது.ஆகவே தற்போது யார் அந்த கொமிஸ் பணத்தை பெறுகிறார்கள் என வசந்த சமரசிங்க கூற வேண்டும்.
வெற்றிபெற்றவுடன் காலிமுகத்திடலில் வாகனங்களை அடுக்கி காட்சி படுத்தினார்கள்.அவை அனைத்தும் சட்டவிரோதமாக பயன்படுத்திய வாகனங்கள் போன்று மக்களுக்கு கூறினார்கள்.அது சட்டவிரோத வாகனங்களாக இருந்தால் ஏன் இன்னும் ஒரு வழக்கு கூட தாக்கல் செய்யப்படவில்லை.அரசாங்கம் மாறும்போது இவ்வாறு வாகனங்கள் கையளிப்பது காலம் காலமாக நடப்பது.தற்போது அந்த வாகனங்கள் எங்கே ?யார் பயன்படுத்துகிறார்கள் ?அதுதொடர்பான விபரத்தை ஏன் வெளியிடவில்லை?
நான் அரசாங்கத்துக்கு சவால் விடுகிறேன்.இந்த வாகனங்கள் தேவையில்லை என்றால் அதை ஏலத்தில் விற்று திறைசேரிக்கு பணம் சேகரியுங்கள் .ஏலத்தில் விற்றுவிட்டு அமைச்சின் செயலாளர்களுக்கு அதிகாரிகளுக்கும் முச்சக்கர வண்டியை கொடுங்கள்.இது அனைத்தும் மக்களை ஏமாற்றும் நாடகம்.
பார் உரிமம் பெற்றவர்களின் பெயர் பட்டியலை புதன்கிழமை வெளியிடுவோம் என கூறினார்கள் எந்த புதன்கிழமை என இன்னும் கூறவில்லை
நாம் ஆட்சிக்கு வந்தபின் உகண்டாவில் உள்ள பணத்தை உடனடியாக நாட்டுக்கு கொண்டுவருவோம் என கூறியது நியாபகம் உள்ளதா ? இப்போது நாங்கள் அவ்வாறு கூறவில்லை என டில்வின் சில்வா கூறுகிறார்?அது உகாண்டாவின் பணம் என தெரிந்துதான் பொய் சொன்னோம் என இன்னொருவர் கூறுகிறார்.
நாம் ஆட்சிக்கு வந்த உடனே மின்சார கட்டணத்தை குறைப்பேன் என அனுர குமார கூறினார்.தற்போது குறைக்க கால அவகாசம் கோறுகிறார்.எரிபொருளில் கொமிஸ் எடுப்பதாலேயே விலை குறைக்க முடியாமல் இருப்பதாக கூறினார்.தற்போது அவர் கூறியதை போன்று கொமிஸ் எடுக்க யாரும் இல்லை என்பதால் எரிபொருள் விலையை குறைக்க முடியும்.அவ்வாறு இல்லை எனில் இந்த அரசாங்கத்திலும் அந்த கொமிஸ் எடுக்கப்படுகிறததா?
அரச ஊழியர்களின் சம்பளத்தை ஆறுமாதங்களுக்கு ஒருமுறை அதிகரிப்போம் என அனுர குமார கூறினார்.ஆட்சிக்கு வந்தவுடன் நாம் அவ்வாறு கூறவில்லை என விஜித கேரத் கூறுகிறார்
கோட்டபாய அரசின் பின்னால் இருந்தவர்களே தற்போது அனுர குமாரவின் பின்னாலும் உள்ளனர்.தேர்தல் முடியம்வரை மட்டுமே சில இனவாதிகள் பதுங்கி இருக்கிறார்கள் தேர்தல் முடிந்தபின் இவர்களின் இனவாத முகம் வெளிப்படும்.கிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்தில் இந்த இனவாத முகம் சிறிது வெளிப்பட்டது.அப்போது நான் உள்ளிட்ட பலர் கொடுத்த அழுத்தத்தால் அது மாற்றப்பட்டது.இதுபோல இந்த அரசும் இனவாதமாக செயற்பட்டால் அதை எதிர்கும் முதல் குரல் என்னுடையாதாக இருக்கும் என தெரிவித்தார்.

