பிரபல இரத்தினக்கல் வியாபாரியின் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர் குழு வீட்டில் இருந்தவர்களை கட்டிப்போட்டு 7 கோடி ரூபா பெறுமதியான நகைகள், பணம் கொள்ளையடித்து சென்றனர்.
லக்கல தேவலதெனிய பிரதேசத்தில் உள்ள இரத்தினக்கல் வியாபாரி ஒருவரின் வீட்டிற்கு நுழைந்த ஐவர் 7 கோடி ரூபா பெறுமதியான நகைகள், பணம் மற்றும் கார் ஒன்றையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
கோடீஸ்வர வர்த்தகர், வர்த்தகரின் மனைவி மற்றும் அவரது தந்தையின் கை, கால்களை கட்டி வைத்து விட்டு ஏழு கோடி ரூபா பெறுமதியான இரத்தினக்கல் பதித்த நகைகள் மற்றும் பணம் மற்றும் கார் ஒன்றையும் திருடிச் சென்றுள்ளதாக லக்கல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
திருடப்பட்ட கார் இன்று (11) காலை கலேவெல பொலிஸ் எல்லைக்குட்பட்ட தலகிரியாகம பிரதேசத்தில் நெடுஞ்சாலைக்கு அருகில் விட்டுச் செல்லப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
லக்கல பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல இரத்தினக்கல் வியாபாரியான “பொடி ரோஹன“ என்ற சுசந்த பிரதீப் குமார் என்பவரிடமிருந்து சுமார் மூன்று கோடி பெறுமதியான இரத்தினக்கல், நகைகள் மற்றும் பணம் நேற்று (10) இரவு திருடப்பட்டுள்ளதாக லக்கல பொலிஸார் தெரிவித்தனர்.
வர்த்தகர் இரவு 9.00 மணிக்குப் பின்னர் வீட்டிற்கு வந்தபோது, முகமூடி அணிந்த 5 பேர் வீட்டின் பின்புற சுவரில் இருந்து குதித்து, அவரது தலையில் துப்பாக்கியை வைத்து, அவரது கை மற்றும் கால்களை டேப் மூலம் ஒட்டி அவரை வீட்டிற்குள் அழைத்துச் சென்று கொள்ளையடித்துச் சென்றதாக அவர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்