News

பொதுபலசேனா அமைப்பினால் அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பில் ஆலோசிப்பதற்காக இடம்பெற்ற விஷேட ஒன்றுகூடல்


2024.07.09ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் முஸ்லிம் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், சட்டத்துறை வல்லுநர்கள், அரசியல் பிரமுகர்கள், துறைசார்ந்தவர்கள், ஆலிம்கள் ஆகியோரிடையிலான விஷேட சந்திப்பொன்று தெஹிவளை பெரிய ஜுமுஆ பள்ளிவாயலில் அதன் நிர்வாகத்தினரின் பங்களிப்புடன் நடைபெற்றது.

பொதுவாக சமூகம் சார் விடயங்களில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவானது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை அல்லது தேவையேற்படும் பட்சத்தில் இவ்வாறு சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் துறைசார்ந்தவர்களை அழைத்து, கலந்தாலோசிக்கும் வழக்கத்தின் அடிப்படையிலேயே இச்சந்திப்பும் நடைபெற்றது.

கொழும்பு உயர் நீதிமன்றத்தினால் குற்றவாளியாக நிரூபனமாகி, நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, தற்போது சிறையிலிருக்கும் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பைப் பெற்றுக்கொடுக்கும் விவகாரத்தில் ஒத்துழைப்பு வழங்குமாறு பொதுபலசேனா அமைப்பினால் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுக்கு வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டிருந்தன.

இதனையடுத்தே குறித்த விடயத்தினை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில் கலந்தாலோசிப்பதற்காக சமூகத்தின் மேற்படி முக்கிய சிவில் அமைப்புகளின் பிரமுகர்கள் மற்றும் வழக்குத் தாக்கலுடன் தொடர்புடையவர்களை ஜம்இய்யா அழைத்து கலந்துரையாடியது.

அதனடிப்படையில் இப்பொதுமன்னிப்பு விவகாரமானது நாட்டின் சட்டத்தோடும் உயர் நீதிமன்றத்தோடும் நேரடியாக தொடர்புற்றிருக்கும் நிலையில் முஸ்லிம் சமூகத்துடனும் சம்பந்தப்படுவதால் நாட்டின் ஒட்டுமொத்த முஸ்லிம்களதும் கருத்தைப் பெறாமல் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவோ, முஸ்லிம் சிவில் அமைப்புக்களோ, அரசியல் பிரமுகர்களோ இது தொடர்பில் எந்தவித நிலைப்பாடுகளையும் எடுக்கமுடியாதுள்ளது என குறித்த கலந்துரையாடலில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

*- ACJU Media -*

*2024.07.17*

Recent Articles

One Comment

  1. இந்த விவகாரம் உலக முஸ்லிம் சனத்தொகையான 24.1% அல்லது உலக முஸ்லிம் சனத்தொகையினரான 1.9 பில்லியன் மக்களின் மனதையும் புண்படு்த்தி அவர்கள் உயிரிலும் மேலாக போற்றி நம்பிக்கை வைத்து அதன் கட்டளைகளைப்பி்னபற்றும் அல்குர்ஆனை அவமதித்த ஒரு நபரை உலகில் வாழும் 1.9 பில்லியன் முஸ்லிம்களும் ஒட்டு மொத்தமாக அந்த குற்றவாளியை மன்னித்தால் மட்டும் தான் சட்டத்துக்கு அது பற்றி கவனம் செலுத்த முடியும். அது தவிர உலக மக்கள் தொகையில் 1.9 பில்லியனில் ஒருவராவது அவனை மன்னிக்காவிட்டால் அந்த மன்னிப்பும் செல்லுபடியாகாது. இந்த நிலைப்பாட்டை ஜம்இய்யதுல் உலமாவே மற்றும் வேறு எந்த சிவில் சமூகங்களோ மிகத் தௌிவாக உரியவர்களிடம் தெரிவிக்க வேண்டும். இது தான் உலக முஸ்லிம்களான 1.9 பில்லியன் முஸ்லிம்களினதும் நிலைப்பாடு. இதில் எந்த வித மாற்றுக் கருத்துக்களுக்கும் இடம் கிடையாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button