News

புதிய அரசின் தேடுதல்கள் மற்றும் விசாரணையில், ஜனாதிபதி ஊடகப் பிரிவிலிருந்த ட்ரோன் கேமரா உள்ளிட்ட பல பொருட்கள் காணாமல் போன விடயங்கள் அம்பலமானதை அடுத்து அங்கிருந்த முன்னாள் பணிப்பாளர் நாயகம் டென்ஷன் ஆகிவிட்டார்..

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் (PMD) புகைப்படக் கலைஞர் ஒருவர் தனக்கு PMD இன் முன்னாள் பணிப்பாளர் நாயகத்திடம் இருந்து தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் அழைப்புகள் வருவதாகக் அளித்த முறைப்பாட்டையடுத்து கஹதுடுவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவிலிருந்து ட்ரோன் கேமரா உள்ளிட்ட பல பொருட்கள் காணாமல் போனதாக கூறப்பட்டதையடுத்து இம்முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க பதவியேற்றதன் பின்னர், பிரிவின் வசதிகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது இவ்வாறு பல கருவிகள் காணாமல் போயுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக விசாரணை நடத்த உள் தணிக்கையும் தொடங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, காணாமல் போன உபகரணங்கள் தொடர்பான தகவல்களை குறித்த புகைப்படக் கலைஞரே பொலிஸாருக்கு வழங்குவதாக கூறி முன்னாள் பணிப்பாளர் நாயகம் தன்னை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அச்சுறுத்தல் விடுப்பதாக புகைப்படக் கலைஞர் தெரிவித்துள்ளார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button