ரிஷாத் பதியுதீனின் ஆதரவாளர்கள் தாக்கப்பட்டு வாகனங்கள் அடித்து சேதமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் பாராமுகமாக இருப்பதாக குற்றச்சாட்டு
(அஷ்ரப் ஏ சமத்)
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாத் பதியுதீன் அவரது ஆதரவாளர்கள் வாகனங்களும் மற்றும் ஆதரவாளர்களும் காதர் மஸ்தான் ஆதரவாளர்களினால் கடந்த 11ஆம் திகதி திங்கட்கிழமை இரவு தாக்கப்பட்டனர்.
இச் அசம்பாவிதங்கள் சம்பந்தமான றிசாட் பதியுதீன் அவர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டும் இதுவரை இவ் விடயம் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
ஆகவே ஐக்கிய மக்கள் கூட்டணி கட்சியின் சட்டத்தரணி என்ற வகையில் இவ்விடயத்தினை பதில் பொலிஸ் மா அதிபரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளோம்.
இவ்விடயமாக உரிய நடவடிக்கை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வலியுறுத்துகின்றோம்.
என பொரளையில் உள்ள ஐக்கிய மக்கள் கூட்டணி தலைமையகத்தில் இன்று 13 ஆம் திகதி நடைபெற்ற ஊடக மாநாட்டிலேயே கட்சியின் சட்டத்தரணி விஜயகுணவர்த்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்
இவ் சம்பவத்திற்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பிணர் காதர் மஸ்தான் அவரது ஆதரவாளர்கள் மேற்படி தாக்குதலில் ஈடுபட்டனர்.
இச் சம்பவங்கள் நேரடி விடியோ சகல ஊடகங்களும் நேற்று இரவு இடம்பெற்ற சகல தொலைக்காட்சி செய்தி அறிக்கைகளில் காட்சிகள் காண்பிக்கப்பட்டது
இத் தாக்குதலில் றிசாட் பதியுதீனின் ஆதரவாளர்கள் மற்றும் வாகனங்கள் அடித்து சேதமாக்கப்பட்டுள்ளது. அத்துடன் றிசாட் பதியுதீன் ஆதரவாளர்கள் 3 பேர் காயங்கள்குள்ளாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
றிசாட் பதியுதீன் தேர்தல் கூட்டமொன்றை முடித்துக் கொண்டு அவ் வழியாக அவரது கட்சி அலுவலகம் 100 மீட்டர் அருகில் இருந்தது அதற்கு செல்லும் வழியிலேயே காதர் மஸ்தான் ஆதரவாளர்கள் வழிமறித்து இத் தாக்குதலை மேற்கொண்டனர். இச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட சகல குற்றவாளிகளையும் கைது செய்து விசாரனை செய்து உடனடி சட்ட நடவடிக்கை எடுக்கும்படி பதில் பொலிஸ் மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு வருவதாக சட்டத்தரணி விஜயகுணவர்த்தன தெரிவித்தார்