News
ஐம்பத்து மூன்று இலட்சத்துக்கும் அதிகமானோர் (31 % ) இம்முறை வாக்களிக்களிக்கவில்லை.
இந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்ற ஐம்பத்து மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் வாக்களிக்கவில்லை என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனால் சுமார் 53,25,108 பேர் பொதுத் தேர்தலுக்கு வாக்களிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும், இத்தேர்தலில் அறு லட்சத்து அறுபத்து ஏழாயிரத்து இருநூற்று நாற்பது வாக்குகள் (5.65 சதவீதம்) நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் 1,71,40,354 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
மொத்தம் பதிவான வாக்குகள் 1,18,15,246.
செல்லுபடியாகும் வாக்குகளின் எண்ணிக்கை 1,11,48,006 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.