News
மற்றுமொரு சட்டவிரோத நவீன சொகுசு பாதுகாப்பு வாகனம் கண்டியில் கண்டுபிடிப்பு
சட்டவிரோதமானது என சந்தேகிக்கப்படும் மற்றுமொரு நவீன சொகுசு பாதுகாப்பு வாகனம் ஒன்று, கண்டி தலைமையக பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட வாகனம்,கண்டியில் உள்ள பிரபல மீன் விற்பனை வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமானது என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
பதில் பொலிஸ் மா அதிபருக்கு நேரடியாக வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், இந்த வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது.