News
தேசியப் பட்டியலில் பெயரிடப்பட்டுள்ளவர்களையும், ஒரு கட்சியில் போட்டியிட்டுத் தோல்வியுற்றவர்களையும் தேசியப்பட்டியலில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்ய முடியும்
இதேவேளை, தங்களது வேட்பாளர் பட்டியல்களில் உள்ளடங்காத ஒருவரின் பெயரை தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்ய முடியாது எனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
தேசியப் பட்டியல் நியமனம் குறித்து கொழும்பில் நேற்று ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் தேசியப் பட்டியலில் பெயரிடப்பட்டுள்ளவர்களைத் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகக் கட்சியின் செயலாளரினால் தெரிவு செய்ய முடியும்.
அவ்வாறில்லையெனின் நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் ஒரு மாவட்டத்தில் போட்டியிட்டுத் தோல்வியுற்ற, தமது கட்சியின் வேட்புமனுவில் உள்ள ஒருவரை தேசியப்பட்டியல் உறுப்பினராகத் தெரிவு செய்ய முடியும் எனத் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்