News
இந்த அரசின் வெற்றி மூலம் என் தந்தை மகிந்த ராஜபக்ஷவின் கனவு நனவாகி விட்டது ; நாமல்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கனவு தற்போதைய அரசாங்கத்தின் வெற்றியின் மூலம் நனவாகியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தெற்கில் உள்ள அரசியல் கட்சிகள், வடக்கு மக்களை கவரக்கூடிய சூழலை உருவாக்குவது மஹிந்த ராஜபக்ஷவின் கனவாக இருந்தது.
தற்போதைய அரசாங்கத்தின் வெற்றியின் மூலம் அந்த கனவு நனவாகியுள்ளதாக நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், நாட்டை மீண்டும் பிரிவினைவாதத்திற்கு இட்டுச் செல்லும் எந்தவொரு செயற்பாட்டிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இடமளிக்காது என நாமல் ராஜபக்ஷ இன்று (17) விடுத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.