எமது மாவட்டத்திற்கு முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் பறிபோய் விட்டது – முஸ்லிம் காங்கிரஸ் அல்லது மக்கள் காங்கிரஸ் தமது தேசியப்பட்டியல் பிரதிநிதிதுவத்தை எமது ஊருக்கு தாருங்கள் என அனுராதபுர மக்கள் சார்பில் வேண்டுகோள்
இலங்கை சுதந்திரம் பெற்றதிலுருந்து அனுராதபுர மாவட்டத்திற்கான பாராளுமன்ற பிரதி நிதித்துவம் சுமார் ஆறு தசாப்தங்களாக பின்பு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஐக்கிய தேசிய முன்னனி ஊடா இசாக் ரஹ்மான் 2015 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று வரலாறு படைத்தார்.
மீண்டுமொரு 2020 தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய மக்கள் சக்தி ஊடாக இஷாக் ரஹ்மான் தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்றத்தை வென்றெடுத்தார்.
2024 நடைப்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி சார்பாக போட்டியிட்ட தாரிக் ஹாஜியார் போட்டியிட்டு தோல்வியுற்றதுடன், அதே சமயம் புதிய ஜனநாயக முன்னனி ஊடாக முன்னால் பாராளுமன்ற உறுப்பினறுமான இஷாக் ரஹ்மான் தோல்வியடைந்தார்.
தேசிய மக்கள் சார்பாக போட்டியிட்ட முபாரக் அவர்களும் கணிசமான வாக்குகளை பெற்று தோல்வியடைந்தார்.
சிறுபான்மை கட்சிகளான குறிப்பாக சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமைகள் தங்களுக்கு கிடைத்த தேசியப் பட்டியலை அனுராதபுர மக்களின் பிரதி நிதித்துவத்தை வழங்க வேண்டும் அதனூடாக மாவட்ட மக்களின் தேவைகள், அபிலாசைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என புத்தி ஜீவிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.