News

காதலுக்கு உதவி செய்யாத ஆசிரியரை தாக்கிய மூன்று இளைஞர்கள் கைது #இலங்கை

வவுனியா வீரபுரம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியர்கள் இன்று  பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,  

கடந்தவாரம் பாடசாலையில் உயர்தர மாணவர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வு இடம்பெற்றிருந்தது. 

இதன்போது இளைஞர் ஒருவர் ஆண் ஆசிரியர் ஒருவருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி, மாணவி ஒருவரிடம் பேசவேண்டும் என தெரிவித்துள்ளார். 

இதற்கு ஆசிரியர் மறுப்பு தெரிவித்த நிலையில் அதனால் ஏற்பட்ட முரண்பாட்டினால் அன்றையதினம் மாலை ஆசிரியர் தங்கியிருந்த வீட்டிற்கு சென்ற இளைஞர்கள் ஆசிரியர் மீது தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக நேற்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நேற்று மாலை ஆசிரியர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் செட்டிகுளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் தமக்கு போதிய பாதுகாப்பு இல்லை என தெரிவித்து பாடசாலையின் அனைத்து ஆசிரியர்களும் இன்றையதினம் சுகவீன விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதேவேளை இதற்கு முன்னரும் இரு ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவங்களும் குறித்த பாடசாலையில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button