News

என் மரணத்திற்கு காரணம் இவர் தான் என தன் நண்பியின் பெயரை பேஸ்புக்கில் பதிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட பெண் #இலங்கை

தனது நண்பிக்காக வங்கியில் இருந்து கடனாக பெற்று கொடுத்த பணத்தினை மீள செலுத்த முடியாதமையால் மனமுடைந்த குடும்ப பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார்.

யாழ்ப்பாணம் , அல்வாய் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் .

இரு பெண்களுக்கு இடையில் நீண்ட கால நட்பு இருந்து வந்துள்ளது. அதில் ஒரு பெண் பண கஷ்டத்தில் இருந்த போது மற்றைய பெண் வங்கியில் பெருந்தொகை பணத்தினை கடனாக பெற்று , தனது நண்பிக்கு பண உதவி செய்துள்ளார்.

பண உதவியை பெற்றுக்கொண்ட பெண் , பணத்தினை மீள செலுத்தாத நிலையில் , வங்கியில் கடன் பெற்ற பெண் , பண நெருக்கடிக்கு ஆளாகி , மனவுளைச்சலில் காணப்பட்டுள்ளார்.

இந் நிலையில் முகநூலில் நண்பியின் பெயரையும் , தனது மரணத்திற்கு காரணம் இவர் தான் என்றும் இவரால் தான் தனது மூன்று பிள்ளைகளையும் அநாதையாக விட்டு செல்வதாகவும் பதிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் .

எம். றொசாந்த்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button