மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து அவரின் மேல் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்து எரித்துக் கொன்ற கணவன் ; புத்தளம் பொலிஸ் பிரிவில் சம்பவம்
மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்ததை அடுத்து கணவன் இரண்டு பிள்ளைகளின் தாயின் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பலத்த தீக்காயங்களுக்கு உள்ளான தாய் , சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் நேற்று (19) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
புத்தளம் தில்அடிய பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான ஜமால்தீன் பாத்திமா சப்னா என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
எரிந்து கொண்டிருந்த மனைவியின் தீயை அணைக்கச் சென்ற போது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்த கணவனுக்கும் சிறு தீக்காயங்கள் ஏற்பட்டு புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கணவனால் தீ வைக்கபட்ட பெண்ணை அயலவர்கள் உடனடியாக முதலில் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.