News

NPP வெறுப்படைந்த பின்னர் மக்கள் எமக்கே அதிகாரத்தை வழங்குவார்கள்..

தேசிய மக்கள் சக்திக்கு பின்னர் நாட்டின் ஆட்சி அதிகாரம் வேறொரு கட்சிக்கு சென்றால் அது ஜனசெத பெரமுனவே என அக்கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் குறிப்பிடுகின்றார்.

நாட்டின் முதிர்ந்த அரசியல் தலைவர்கள் என்று கூறிக்கொள்பவர்களை மக்கள் அடிப்பதை தான் பார்த்ததாகவும் அவர் கூறுகிறார்.

தமது கட்சி திருடர்களையோ, மோசடி செய்பவர்களையோ, கொலைகாரர்களையோ பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்றும் அவர் கூறினார்.

தற்போதைய அரசாங்கம் சரியில்லை என நினைத்தால் தமது கட்சிக்கு அதிகாரத்தை வழங்குவார்கள் எனவும் அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

Recent Articles

Back to top button