News

மறைத்து வைத்துள்ள நெல்லை காட்டித்தர தயார் ! பறிமுதல் செய்ய தயாரா ?

பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் மறைத்து வைத்துள்ள அரிசியை சந்தைக்கு பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்காமல் எழுபதாயிரம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதனல் எதிர்வரும் டிசம்பர் மாதம் அறுவடையை ஆரம்பிக்கும் பாரிய அறுவடையையும் பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் குறைந்த விலைக்க்கு கொள்வனவு செய்ய வழி வகுக்கும் என தேசிய விவசாய சங்கத்தின் தலைவர் அனுர தென்னகோன் தெரிவித்தார்..

கடந்த ஒவ்வொரு அரசாங்கமும் இந்த பாரிய ஆலை உரிமையாளர்களின் தந்திரங்களில் சிக்கியதைப் போன்று புதிய அரசாங்கமும் சிக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த ஆண்டு அறுவடை செய்யப்பட்ட 22 இலட்சம் மெற்றிக் தொன் நெல்லை பாரிய நெல் ஆலை உரிமையாளர்கள் அரிசியாக மாற்றாமல் மறைத்து வைத்திருப்பதை சுட்டிக்காட்டிய தலைவர், ஆலை உரிமையாளர்களுக்கு வக்காலத்து வாங்காமல் , அந்த அரிசியை சந்தைக்கு கொண்டு வருவதே புதிய அரசாங்கத்தின் பணியாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

கடந்த ஆண்டு 46 லட்சம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்தது மற்றும் அந்த உற்பத்தியில் எழுபத்தைந்து சதவீதம் (75%) நாட்டரிசி.இந்நாட்டின் வருடாந்த அரிசியின் தேவை இருபத்தி ஆறு மெற்றிக் தொன், அப்படியானால் எஞ்சிய அரிசிக்கு என்ன ஆனது?

ஒரு குறிப்பிட்ட நடுத்தர நெல் ஆலை உரிமையாளர் இன்னும் பதினெட்டு லட்சம் கிலோ நாட்டு நெல்லை மறைத்து வைத்துள்ளார்.மறைத்து வைக்கப்பட்டுள்ள நெல்லை காட்ட நான் தயார் பறிமுதல் செய்ய அரசாங்கமும் நுகர்வோர் அதிகார சபையும் தயாரா ?

இந்த விடயத்தில் அரசாங்கமும் நுகர்வோர் அதிகார சபையும் உடனடியாக தலையிடாவிட்டால் விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் பெரும் அநீதி இழைக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Recent Articles

Back to top button