News

காஸா அப்பாவிகளுக்கு துஆ செய்வதை கூட தடுக்கும் வகையில் சமூக துரோகமிழைத்தவர்களை ஆதாரத்துடன் வெளிப்படுத்துவேன் ; ரஸ்மின் MISc

*காஸா அப்பாவிகளுக்கு துஆ செய்வதை கூட தடுக்கும் வகையில் சமூக துரோகமிழைத்தவர்களை ஆதாரத்துடன் வெளிப்படுத்துவேன்.*

அன்பின் சகோதர, சகோதரிகளே! உலமாக்களே, சமூக சிந்தனை கொண்டவர்களே!

உங்கள் அனைவர் மீதும் ஏக இறைவனின் அமைதி உண்டாகட்டுமாக!

காஸாவில் அப்பாவிகள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பாக அங்கு நடக்கும் அநியாயங்களை கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக சுமார் 410 நாட்களாக இரவு பகலாக ஒரு நாள் கூட விடாமல் நான் பேசி வருவதை அனைவரும் அறிவீர்கள்.

தினமும் லட்சக் கணக்கான மக்கள் குறித்த வீடியோக்களை பார்த்து காஸா அப்பாவிகளின் விடிவுக்காக இறைவனிடம் துஆ கேட்டு மன்றாடினார்கள்.

இந்நிலையில் எனது RasminMISc என்ற Youtube Channel தற்போது முடக்கப்பட்டுள்ளது.

*இந்த இழி செயலை செய்தது ஒரு முஸ்லிம் கட்சியின் தலைவரின் அனுமதியுடன் அவருடைய ஊடக குழுவை சார்ந்தவர்கள் ஆவர்.*

*இத்தனை நாட்களில் இஸ்ரேலியர்கள் அல்லது சியோனிஸ்டுகள் கூட செய்யாத இழிவான இந்த அநியாயத்தை இவர்கள் செய்வார்கள் என நான் ஒருபோதும் நினைக்கவில்லை.*

“யாரும் எனது மார்க்கக் கொள்கை, அரசியல் கொள்கையில் இணங்கலாம் அல்லது எதிர்க்கலாம். அது அவரவர் புரிதல் விருப்பம் சார்ந்தது.”

ஆனால், காஸா அப்பாவிகளுக்கு நடக்கும் அநியாயங்களை 410 நாட்களுக்கும் மேலாக ஒரு நாள் விடாது இரவு பகலாக கொண்டு சேர்த்த எனது RasminMISc என்ற Youtube Channel ஐ முடக்கியமை காஸா மக்களுக்கு செய்த மாபெரும் துரோகமாகும்.

இந்த துரோகத்திற்கு துணை போன முஸ்லிம் கட்சியின் தலைவர் யார் என்பதையும், அதனை முன்னின்று செய்தவர்கள் மற்றும் அதனை எப்படி செய்தார்கள் என்ற விபரங்களை் அனைத்தையும் ஓரிரு நாட்களில் ஆதாரத்துடன் வெளிப்படுத்துவேன். இன்ஷா அல்லாஹ்

நமது RasminMISc Youtube Channel மீட்டெடுக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். நமது முயற்சி வெற்றிபெற பிரார்த்தனை செய்யுங்கள் உறவுகளே.

பாலஸ்தீனம் சுதந்திரம் பெறவும், சுதந்திரம் அடையவும் அல்லாஹ்விடம் பிரார்த்திப்போமாக!

உங்கள் அன்பு சகோதரன்,
ரஸ்மின் MISc
+94771081996

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button