பூமிக்குள் புதையல் போல் ஒன்று இருப்பது தெரியவந்ததை அடுத்து, மத்திய அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகில் அந்த புதையலை தேடும் பணி ஆரம்பமானது.
வெயாங்கொடை வதுரவ பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படுகின்ற மத்திய அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகில் புதையல் ஒன்றை தேடும் பணி நேற்று (21) ஆரம்பமானது.
அத்தனகல்ல நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவுக்கு அமைய இந்த தேடுதல் பணி நடைபெற்று வருகின்றது.
பல ஆண்டுகளாக இங்கு புதையலைத் தோண்டிய பலரை உபகரணங்களுடன் பாதுகாப்புப் பிரிவினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக, சதுப்பு நிலப்பகுதியில் அமைந்துள்ளது இந்த இடத்தில் தொல்பொருள் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வின்போது அங்கு புதையல் எதுவும் இல்லை என தகவல் வெளியாகியுது.
ஆனால் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நடத்திய விசாரணையில் பூமிக்குள் ஏதோ ஒன்று இருப்பது தெரியவந்துள்ளது.
இதன்படி, அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் ஆதாரங்களை அறிக்கை செய்ததன் பின்னர், தொல்பொருள் திணைக்களம், சுரங்க மற்றும் புவியியல் பணியகம், வெயாங்கொடை பொலிஸ், வீதி அபிவிருத்தி அதிகாரசபை, மீரிகம பிரதேச செயலகம் ஆகியவற்றின் பங்குபற்றுதலுடன் அதிகாரிகளின் மேற்பார்வையில் பொது மக்களின் ஒத்துழைப்புடன் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.