News

எம்மிடம் நிரந்தர பதில் இல்லை ! அந்தத் தருணத்தில் தேவைக்கேற்ப பணிகள் மேற்கொள்ளப்படும்

தம்மிடம் நிரந்தர பதில் இல்லை என்றும், அந்தத் தருணத்தில் தேவைக்கேற்ப பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் கே. டி. லால்காந்தா குறிப்பிட்டார்.

அரிசி தட்டுப்பாடு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டில் தற்போது நிலவும் அரிசி தட்டுப்பாடு காரணமாக இந்தியாவில் இருந்து அரிசியை இறக்குமதி செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும், முதற்கட்டமாக 70,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு தமது அமைச்சும் வர்த்தக அமைச்சும் இணைந்து அமைச்சரவை பத்திரத்தை அனுப்பவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

நாட்டில் போதியளவு அரிசி உற்பத்தி செய்யப்பட்ட போதிலும் அது சந்தைக்கு வராத காரணத்தினால் அரிசி இறக்குமதி செய்யப்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

பாரிய அரிசி ஆலை உரிமையாளர்களுடன் தமக்கு எந்த பிரச்சினையும் இல்லை எனவும்,சந்தைக்கு வராத அரிசி இருப்புக்களை பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் தவிர வேறு எங்கும் வைத்திருக்க முடியாது என சுட்டிக்காட்டிய அமைச்சர், விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் பாதகம் ஏற்படாத வகையில் தற்போதைய அரசாங்கம் செயற்படும் என்றும் தெரிவித்தார்.

Recent Articles

Back to top button