“system change ஏற்படும் வரை எமது சுயாதீனத்தை இழந்துவிடக் கூடாது”
அமைச்சர் விஜித ஹேரத் அவர்கள் அக்குரனையில் குறிப்பிடுவது போன்று அனுபவம் உள்ளவர்களுக்கு மட்டுமா அமைச்சுக்கள் வழங்கப்பட்டிருந்தது? அவ்வாறெனில் முஸ்லீம்களுக்குள் திறமையானவர்கள் இருந்தும் அனுபவத்தை காரணம் காட்டி புறக்கனித்தது ஏன்?
விகிதாசார பிரதிநிதித்துவ அரசியலில் சிறுபாண்மை,பெரும்பாண்மை என்பது தவிர்க்க முடியாததாகும்.
System change ஏற்படுவதற்கு இன்னும் பலவருடங்கள் ஜனாதிபதி அநுரகுமார அவர்களுடன் இணைந்து நாம் அனைவரும் உழைக்க வேண்டும் என்பதில் எமக்கு மாற்றுக் கருத்தில்லை.
ஆனால்,
“மிகையான அதிகாரங்கள், கட்டுப்படுத்த முடியாத அதிகாரங்கள் ஒருவருக்கு அல்லது ஒரு குழுவுக்கு கிடைக்கும் போது மனிதப் பலவீனங்களின் அடிப்படையில் தத்துணிவாக அல்லது சர்வாதிகாரமாக அவர்களால் பிழையாக பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் உண்டு என்பது இயல்பாகும். இதற்கு யாரும் விதிவிலக்கானவர்கள் இல்லை.
இவ்வேளையில் சுயாதீனமாக, சரியாக, நேர்மையாக கட்டுப்படுத்தக் கூடிய தனிநபர்கள் அல்லது அரசியல் கட்சிகள் பாராளுமன்றத்திலும், பாராளுமன்றத்துக்கு வெளியிலும் செயற்படுவதானது மிகவும் பொருத்தமாகும்.
இந்த நாட்டில் system change வருவதற்கு பல வேலைத்திட்டங்களும், மாற்றங்களும் ஏற்பட வேண்டியுள்ளது. இதனை இவ்வாறு புரிந்து கொள்ளலாம்.
1. எல்லா ஜனாதிபதிகளும் தெரிவாகிய கோசம் ஒன்றுக் கூடாகவே அநுரகுமார அவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பதே உண்மை. அதாவது
மைத்ரி – நல்லாட்சி கோசம்
கோட்டா – தேசிய பாதுகாப்பு என்ற கோசம்
அநுர – ஊழலற்ற ஆட்சி என்ற கோசம்.
2. இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரே நாட்டவர்களாக நாம் இயங்க வேண்டியிருந்தாலும் பெளத்த பீடங்களை மீறி ஆட்சியாளர்களால் செயற்படுவது முடியாத காரியம் என்பது ஜனாதிபதியின் தரிசிப்புக்களை அவதானிக்கலாம்.
3. வட கிழக்கில், மலையகத்தில் நம்பிக்கை தரக்கூடிய system change இன்னும் ஏற்படுத்த வேண்டியுள்ளது. இது ஒருவாரத்தில் நடந்து முடிவதில்லை.
4. ஜனநாயக நீரோட்டத்தில் பூகோல அரசியலில் வெளிநாடுகளை புறக்கணித்து இலங்கை போன்ற மூன்றாம் மண்டல நாடுகள் தனித்து இயங்க முடியாது.
இவைகளைத் தாண்டி system change ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதும் எமது எதிர்பார்ப்பு அதுவரை சுயாதீனமாக செயற்படுவோம்.
[MLM.சுஹைல்]