News
காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 48 மணி நேரத்தில் 120 பலி !!
காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 48 மணி நேரத்தில் 120 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
காசா பகுதியில் Zeitoun நகரில் உள்ள தங்கும் விடுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 07 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மற்ற இறப்புகள் மத்திய மற்றும் தெற்கு காசாவில் பதிவாகியுள்ளன.
இந்த தாக்குதல்களால் காஸா பகுதியில் உள்ள 12 மருத்துவமனை ஊழியர்களும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவமனைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
எனினும், இஸ்ரேல் படைகள் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளன.
மேலும், உணவுப் பற்றாக்குறை ஏற்படக் கூடும் என உதவிக் குழுக்களும் நிபுணர்களும் எச்சரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.