News

தேவையான இடத்தில் தேவையான அமைச்சுக்கள் வழங்கப்பட வேண்டும்.

ஏழைகளுக்கு ஹஜ் கடமை கிடைக்கக் கூடாது என்பதல்ல இங்கு பிரச்சினை

‘ஹஜ் கடமை என்பது ஏழைகளுக்கானதல்ல என்ற அடிப்படையை அமைச்சர் விஜித ஹேரத் புரிந்து கொண்டுள்ளாரா?”

முஸ்லீம் அமைச்சர் இல்லை என்று அதைப்பிடித்துக் கொண்டு தொங்காதீர்கள் என்று விஜித ஹேரத் அவர்கள் குறிப்பிட்டிருப்பதானது முஸ்லீங்களின் கலாசார உரிமையையும், உணர்வையும் புரியாததன் விளைவே.

தேவையான இடத்தில் தேவையானவர்களை நியமிக்க வேண்டும் என்று கூறியே NPP க்கு வாக்களித்தவர்களும், வாக்களிக்காதவர்களும் தொங்கிக் கொண்டு அழுத்தம் தருகிறார்கள் என்றால் எவ்வளவு அநீதி இவ் அமைச்சரவை விடயத்தில் நடந்துள்ளது என்பதை விஜித ஹேரத் அவர்கள் புரிந்து கொள்வார்கள் என நம்புகிறோம்.

உதாரணமாக, பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் பாராளுமன்றத்தில் குறிப்பிட்ட சதவீதம் இருக்க வேண்டும் என்பதன் பின்னர் வழங்கப்பட்டுள்ள மகளிர் விவகார அமைச்சானது பொண் பிரதிநிதி ஒருவருக்கே வழங்கப்படுகின்றதே தவிர ஆண் பாராளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்படுவதில்லை. ஏனென்றால் மகளிர் விவகாரம் என்பது பெண்களுடன் தொடர்பானது என்பதால் அதற்கு பெண் அமைச்சர் நியமிக்கப்படுவதுதான் பொருத்தம் என்பதால்.

இதேபோன்றுதான் முஸ்லீம்களின் கலாசார விடயங்களின் அடிப்படை புரிதல் இல்லாதவா்களினால் முஸ்லீம் மதக் கலாசார விடயங்களில் சிறப்பாக பங்குபற்ற முடியாது.

உதாரணமாக, விஜித ஹேரத் அவர்கள் ஏழைகளும் ஹஜ்ஜுக்கு போவதற்கு நாங்கள் ஹஜ்கோட்டாக்களை வழங்குவோம் என்பது முஸ்லீம்களுக்குள் இருக்கின்ற அடிப்படைத் தீர்வுப் பிரச்சினையும்மில்லை. அவ்வாறான இலவச கோட்டாக்கள் ஏழைகளுக்கு வழங்கப்படுவதில் தவறும்மில்லை அதேபோன்று ஹஜ் கடமை என்பது ஏழைகளுக்கு மார்க்கத்தில் கடமையான ஒருவிடயமுமில்லை. போன்ற இவ்வாறான மார்க்கம் தொடர்பான அடிப்படைப் புரிதலை அமைச்சர் விஜித ஹேரத் அவர்களிடம் நாம் எதிர்பார்க்கவும் முடியாது. இது ஒரு உதாரணம் மாத்திரமே இதேபோன்று இன்னும் பல விடயங்கள் முஸ்லீம்களின் சமய விவகாரத்தை தொடர்புபடுத்தி அரசாங்கங்கள் தீர்மானங்களை எடுக்கும் போது அவ்விடத்தில் முஸ்லீம் ஒருவர் அமைச்சராக இருக்க வேண்டிய அவசியத்தேவை இருக்கிறது.

MLM.சுஹைல்

Recent Articles

Back to top button