News

முஸ்லிம் காங்கிர‌சின் நிர்வாக‌த்தில் இல்லாத‌ ஹ‌ரீசை, செய‌லாள‌ர் நிசாம் காரியப்பர் நீக்கி முசுப்பாத்தி எடுக்கிறார்



முஸ்லிம் காங்கிர‌சின்  உய‌ர் பீட‌த்தில் ச‌ட்ட‌ப்ப‌டி இல்லாத‌ ஒருவ‌ரை அக்க‌ட்சி செய‌லாள‌ர் நீக்குவ‌தாக‌ அறிவித்திருப்ப‌து கேலிக்கூத்தாகும்.


தேர்த‌ல் திணைக்க‌ள‌த்தின் உத்தியோக‌பூர்வ‌ இணைய‌த்த‌ள‌த்தில் இம்மாத‌ம் ப‌திவிட‌ப்ப‌ட்டுள்ள‌ முஸ்லிம் காங்கிர‌சின் நிர்வாக‌த்தில் க‌ட‌ந்த‌  ஹ‌ரீசின் பெய‌ர் இல்லை. ஹ‌ரீஸ் இர‌ண்டு வ‌ருட‌த்துக்கு முன் பிர‌தி த‌லைவ‌ராக‌ தெரிவு செய்ய‌ப்ப‌ட்ட‌ செய்திக‌ள் வ‌ந்த‌ன‌. ஆனால் அது ப‌ற்றி நிசாம் காரிய‌ப்ப‌ர் தேர்த‌ல் திணைக்க‌ள‌த்துக்கு அறிவிக்காம‌ல் மூடி ம‌றைத்துள்ளார்.
க‌ட‌ந்த‌ இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ளாக‌ இது விட‌ய‌ம் தேர்த‌ல் திணைக்க‌ள‌ வெப்சைட்டில் வ‌ர‌வில்லை.

அவ்வாறு புதிய‌ நிர்வாக‌த்தை நிசாம் காரிய‌ப்ப‌ர் தேர்த‌ல் திணைக்க‌ள‌த்துக்கு  அறிவித்திருந்தால் ஏன் இன்னும் அப்லோட் ஆக‌வில்லை என்றாவ‌து விசாரித்திருக்க‌லாம். 5 மாத‌ங்க‌ளுக்குமுன் இதை நான் ஊட‌க‌ங்க‌ளில் சுட்டிக்காட்டியிருந்தேன். அத‌ன் பின்ன‌ரும் இது ப‌ற்றி நிசாம் காரிய‌ப்ப‌ரும் அக்க‌றை கொள்ள‌வில்லை   ஹ‌ரீஸும் அப்போதாவ‌து விழித்திருக்க‌ வேண்டும்.

திட்ட‌மிட்டே ஹ‌க்கீமும் நிசாம் காரிய‌ப்ப‌ரும் ஹ‌ரீசை ஏமாற்றினார்க‌ளா அல்ல‌து ஹ‌ரீசும் க‌ல்முனையும் ஏமாளி என‌ நினைத்து  ஏறி மிதித்துள்ளார்க‌ளா?

முபாற‌க் முப்தி
உல‌மா க‌ட்சி.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button