News

முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய வாகனங்கள் புதிய அமைச்சர்களுக்கு..

கடந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் பயன்படுத்திய வாகனங்களை இந்த அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களும் பயன்படுத்துவார்கள் என அரசாங்க அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் மற்ற உறுப்பினர்களுக்கும் எரிபொருள் சிக்கனத்துடன் கூடிய சொகுசு அல்லாத வாகனம் வழங்கப்படும் என்றார் அதிகாரி.

இதன்படி, புதிய அரசாங்கத்தின் 159 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் உத்தியோகபூர்வ வாகனமாக ஏதாவது வாகனம் கிடைக்குமென அவர் தெரிவித்துள்ளார்.புதிய அரசாங்க அமைச்சர்களுக்கு புதிய உத்தியோகபூர்வ வாகனங்கள் கிடைக்காது எனவும், புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் தமது அமைச்சுக்களில் கடந்த அரசாங்க அமைச்சர்கள் வழங்கிய உத்தியோகபூர்வ வாகனங்களை கையளிப்பதாகவும் அரசாங்க அதிகாரி தெரிவித்தார்.

159 எம்.பி.க்கள் அரசாங்க வேலைகளுக்காக நீண்ட தூரம் தமது தெரிவு செய்யப்பட்ட மாவட்டங்களுக்கு செல்ல வேண்டியிருப்பதால் அவர்களுக்கும் உத்தியோகபூர்வ வாகனங்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், அவர்களுக்கு V8 சொகுசு கார்கள் வழங்கப்படாது என்று அந்த அதிகாரி கூறினார்.

பராமரிப்பதற்கு சிரமமான 344 அரச வாகனங்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். வி8 போன்ற சொகுசு கார் மாடல்கள் இருப்பதாகவும், அவற்றை பராமரிக்க அரசு அதிக பணம் செலவழிப்பதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார். இந்த வாகனங்களை பொது ஏலத்தில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் எம்.பி.க்களுக்கு தேவையான வாகனங்களை வாங்குவதற்கு பயன்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

Recent Articles

Back to top button