News
அச்சுறுத்தல் காணப்படும் பிரதேசங்களில் ஏற்படும் அனர்த்தங்களை தடுப்பதற்கு புதிய தீர்வுகள் வழங்க வேண்டும் ; ஜனாதிபதி
அனர்த்த முகாமைத்துவ நிறுவனக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவது மாத்திரம் போதாது எனவும், தீர்வுகளை அடி மட்டத்திற்குக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், உள்ளூராட்சி நிறுவனங்களை பலப்படுத்தி அச்சுறுத்தல் காணப்படும் பிரதேசங்களில் ஏற்படும் அனர்த்தங்களை தடுப்பதற்கு புதிய தீர்வுகள் வழங்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜயசேகர இன்று தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்ட போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைத் தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. R