“NPP உறுப்பினர்களின் சம்பளம் அரச திரைசேரிக்குச் செல்வதுதான் system change ஆக அமையும்.”
நடைபெற்று முடிந்த தேர்தல் பிரச்சாரங்களை அவதானித்திருந்தால் எமக்குத் தெரியும் NPP அரசாங்கம் ஆட்சியமைக்கும் போது அரச செலவீனங்களை குறைப்பதாகவும், பாராளுமன்ற உறுப்பினர்கள் சம்பளம் பெறப்போவதில்லை என்றும், வாகனங்கள் பயன்படுத்த மாட்டோம், பாராளுமன்ற கென்டினில் உணவு உண்ணமாட்டோம் இதை இன்னும் ஆழமாக பார்த்தால் ஒரு வேட்பாளர் பஸ்ஸில் கொழும்புக்குச் சென்று ஆட்டோ பிடித்து பாராளுமன்றத்திற்கு செல்வேன் என்றெல்லாம் பேசியிருந்ததை ஞாபகமூட்டிப்பார்க்கலாம்.
உண்மையில் சம்பளம் பெறாமல், மக்களின் பெயரால் கிடைக்கப்பெறும் வரப்பிரசாதங்களை ,வாகனங்களை, உணவுகளை பயன்படுத்தாமல் உண்ணாமல் இருப்பதென்பது பெரும் தியாகமும் நல்ல முன்மாதிரியும் தான். என்றாலும் இவ்வார்த்தை ஜாலங்கள் தேர்தலில் வாக்குச் சேகரிப்பதற்காக மாத்திரம் அமையவும் கூடாது என்பது போல அந்நோக்கத்தை அடைந்து கொள்வதற்கான முறையான திட்டமிடல்களை செய்யவும் வேண்டும்.
உதாரணமாக,
NPP உறுப்பினர்களின் சம்பளம் NPP யின் பொதுநிதிக்கு வழங்கப்பட்டு மீண்டும் அதிலிருந்து உறுப்பினர்களுக்கு சம்பளம் வழங்குவதானது கண்கட்டு வித்தை காட்டும் செயலாகும்.இதனைவிட நேரடியாகவே உறுப்பினர்கள் தங்களது சம்பளத்தை பெற்றுக்கொள்ளலாமே. இதைத்தானே அடுத்த கட்சிக்காரர்களும் செய்கிறார்கள்.
உண்மையில் NPP யின் நோக்கம் மக்கள் பணம் வீண்விரயமாகக் கூடாது, மக்கள் பணிக்கு செலவிடப்பட வேண்டும் என்றிருந்தால் அப்பணங்கள் அரச திரைசேரிக்கு வழங்கப்பட்டு முறையாக பயன்படுத்துவதுதான் நோக்கத்தை நிறைவு செய்ததாக அமையும்.
நாங்கள் கூறவும் இல்லை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் சம்பளம் பெறுவது தவறு என்று அது நடைமுறைச்சாத்தியமற்றதாகும். முழுநேர அரசியல் செய்பவர்களாகவே எல்லா அரசியல்வாதிகளும் இருக்க வேண்டும் அவ்வாறு செயற்பட்டால்தான் மக்கள் பணி சிறப்பாக இருக்கும். இதில் தங்களது பணிக்கு சம்பளம் பெறுவது எவ்விதத்திலும் பிழைகிடையாது.
இங்கு system change என்ற பெயரில் கட்சியின் நிதியத்திற்கு அனைவரின் பணத்தை எடுத்து பிறகு அவர்களுக்கே வழங்குவதை விட அரசாங்க திரைசேரிக்கு வழங்கினால் பயனுள்ளதாகவும் உண்மையான முற்போக்காகவும் இருக்கும்.
JVP யிலும் இன்னும் வேறு கட்சிகளிடமும் உறுப்பினர்களின் சம்பளம் கட்சியின் நிதியத்திற்கு பெற்றுக்கொள்கின்ற நடைமுறைகள் பின்பற்றப்பட்டாலும் உறுப்பினர்களுக்கு சம்ளம் வழங்கப்படுகின்றதுதானே. இதுதான யதார்த்தம். ஒரு கட்சியாக கட்சி செயற்பாடுகளுக்கு நிதகளைப் பெற்றுக்கொள்வதற்கு பல்வேறு வருமான ஊடகங்கள் இருக்கின்றன அவற்றின் ஊடாக நிதிகளை தாராளமாக பெற்று ஒழுங்குபடுத்தலாம்தானே.
தற்போதய நாட்டின் பொருளாதார்த்தை மேம்படுத்துவதற்கு NPP உறுப்பினர்களின் சம்பளம் அரசாங்க திரைசேரிக்கு வைப்புச் செய்யப்பட்டால் மிகவும் சிறப்பான முற்போக்காக அமையும். அதேபோன்று JVP கட்சியானது தற்போது ஆட்சியமைத்துள்ளதால் அரசாங்க திரைசேரியை வலுப்படுத்த வேண்டிய தேவையும் இருக்கிறது.
MLM.சுஹைல்