News

சந்தேக நபர்களை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்.

04.10.2024 அன்று அஹங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வஹேன்கொட பிரதேசத்தில் வசித்து வந்த ஆண் மற்றும் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்களை கைது செய்ய காலி குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் அஹங்கம பொலிஸ் நிலையமும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த இரண்டு சந்தேக நபர்களும் தற்போது பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன் அவர்களின் விபரங்கள் பின்வருமாறு.

சந்தேக நபர்களின் விவரம்

01. பெயர் :-மொஹொட்டி மல்வத்தையின் சுசில் அல்லது பத்து

வயது:- 46 ஆண்டுகள்

ஜா.ஹா.ஏ. :- 780881054V

முகவரி :- இல. 39/11, கங்காராம வீதி, மாகல்லா.

2.பெயர் :- மேத்யூ பிரசன்னா அனுருத்த குமார்

வயது: – 41 ஆண்டுகள்

ஜா.ஹா.ஏ. 831161176V

முகவரி :- இல. 251/3, கமகே வத்த, மாதரம்ப, உனவடுன

அவர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

தொலைபேசி எண்-

01. சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் / காலி -071-8591452

02. நிலையத் தளபதி / பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியகம் – 071-8583762

03. நிலைய அலுவலர் / அஹங்கம 071-8591465

Recent Articles

Back to top button