News


காரைதீவு- மாவடிப்பள்ளி வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட மத்ரஸா மாணவர்கள் இருவரின் ஜனாஸாக்கள் இதுவரை மீட்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது





பாறுக் ஷிஹான்

வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட மத்ரஸா மாணவர்களின் ஜனாசாக்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

தற்போது வரை இரண்டு பேரின் ஜனாஸாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் குறிப்பிட்டார்.

குறிப்பாக இத்தேடுதலில் மேலதிகமாக இராணுவம் விசேட அதிரடிப்படை பங்கேற்றுள்ளதுடன் வெள்ளத்தினால் அடித்து செல்லப்பட்ட உழவு இயந்திரமும் மீட்கப்பட்டு வருகின்றன.

தற்போது மீட்கப்பட்ட  ஜனாசா மீட்கப்பட்டு  சம்மாந்துறை வைத்தியசாலை க்கு கொண்டு செல்லபட்டுள்ளன.


அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி  சின்னப்பாலம் அருகே 11 பேர் பயணம் செய்த  உழவு   இயந்திம்   வெள்ள  நீரில் அகப்பட்டு  தடம்புரண்ட நிலையில் அதில் பயணம் செய்தவர்கள் வெள்ள நீரில் அள்ளுண்டு காணாமல் போயினர்.

பின்னர் கல்முனை பொதுமக்கள் மாளிகைக்காடு ஜனாஸா நலம்புரி அமைப்பினர் உட்பட கல்முனை கடற்படையினரின் உதவியுடன் மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.


குறித்த மீட்புப்பணியில் போது   அப்பகுதியில் உள்ள அதி வலு மின்கம்பத்தை பிடித்திருந்த மாணவர்கள் சிலரை மீட்புக்குழுவினர் உயிருடன் மீட்டு அருகில் உள்ள வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.மேலும் இந்த விபத்தில் 06  சிறுவர்கள்  உழவு இயந்திரத்தின் சாரதி மற்றும் அவருடன் பயணித்த மற்றுமொருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு தற்போது காணாமல் போயுள்ளனர்.

எஞ்சிய  நான்கு பேர் இன்னும் மீட்கப்படவில்லை அத்துடன் நள்ளிரவு தாண்டியதன் காரணமாக மீட்புப்பணி இடைநடுவில் கைவிடப்பட்டது.

26.11.2024 அன்று நிந்தவூரில் இருந்து சம்மாந்துறை நோக்கிச் சென்ற 11 பேரை  ஏற்றிச் சென்ற உழவு இயந்திரமே  விபத்திற்குள்ளானது.இதன்போது
நிந்தவூர் காஷிபுல் உலூம் அறபுக் கல்லூரியிலிருந்து சம்மாந்துறைக்கு விடுமுறையில் சென்ற மாணவர்கள்   06  பேர்  நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். இவர்கள் சம்மாந்துறையை வசிப்பிடமாகக் கொண்ட 12 வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் ஆவர்.

பின்னர் இன்று (27) காலை முதல் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.நிந்தவூர் மதரஸா பள்ளியில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது வெள்ளம் காரணமாக விபத்துக்குள்ளானது என தற்போதைய விசாரணையில் தெரியவந்துள்ளது.
காணாமல் போன குழந்தைகளை தேடும் பணியில் போலீசாரும்  அப்பகுதி மக்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button