News

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பள்ளிவாசல் திறந்துவைப்பு

கலாபூஷணம் பரீட் இக்பால்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் கொழும்பு – அல் ஹிக்மா நிறுவனத்தின் அனுசரணையில் ஜும்மா பள்ளிவாசல் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு பிரதம அதிதியாக அல் ஹிக்மா நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.எச்.ஷேஹுத்தீன் (மதனி) அவர்கள் கலந்து திறந்து வைத்தார். மேலும் கெளரவ அதிதியாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சற்குணராஜா அவர்களும் அனைத்து பீட பீடாதிபதிகளும் மூவின மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

நான்கு மதத்தினருக்கும் சரிசமமாக தலா 2 ஏக்கர் காணி, அவரவர் மத ஸ்தலங்களை அமைக்க யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சற்குணராஜா அவர்கள் ஒதுக்கி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். தற்போது 4 மத ஸ்தலங்களும் அமைக்கப்பட்டு மத நல்லிணக்கம் ஏற்பட்டுள்ளது. 

*கலாபூஷணம் பரீட் இக்பால் – யாழ்ப்பாணம்*

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button