News
ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பதிவேற்றுவதாக அச்சுறுத்தி கப்பம் கோரும் சம்பவங்கள் அதிகரிப்பு
இணையத்தில் ஆபாசமான காட்சிகளைக் பதிவேற்றுவதாக மக்களை பயமுறுத்தும் மற்றும் அச்சுறுத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக கணினி அவசர பதில் மன்றத்தின் மூத்த தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் திரு.சாருக தமுனுபொல தெரிவித்தார்.
இவ்வருடத்தில் இதுவரை 1100க்கும் மேற்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன.அந்த சம்பவங்களில், காதல் முறிவுகளுடன், மற்ற தரப்பினரை பயமுறுத்துவதற்காக செய்யப்பட்ட சம்பவங்கள் ஏராளம். இதுபோன்ற சம்பவங்கள் குறித்து கவலைப்பட தேவையில்லை.ஆதாரம் கிடைத்த பிறகு, அருகில் உள்ள போலீசில் புகார் செய்யலாம்.கணினி அவசர பதில் மன்றத்திலும் முறைப்பாடு செய்யலாம் என பொறியியலாளர் மேலும் தெரிவித்தார்.