News
VIDEO : அதி பாதுகாக்கப்பட்ட பகுதியில் 4 ஏக்கரில் 250,000 கஞ்சா செடிகளை சூட்சுமமாக வளர்த்த ஐந்து பேர் சிக்கினர்
அதி பாதுகாக்கப்பட்ட பகுதியாக கருதப்படும் யால வனத்தின் இயற்கை சூழலுக்கு பங்கம் ஏற்படுத்தி பாரிய சேதத்தை ஏற்படுத்தி கஞ்சா பயிரிட்ட ஐவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
நேற்று (27) கதிர்காமம் பொலிஸ் பிரிவில் யால பாதுகாக்கப்பட்ட வனத்தில் வெஹெரகல பகுதியில் 04 சுற்றிவளைப்புகளை மேற்கொண்டுள்ளப்பட்ட போதே குறித்த ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சுற்றிவளைப்பில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 4 ஏக்கரில் 250,000 கஞ்சா செடிகளும் அழிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் எம்பிலிபிட்டிய, வெல்லவாய மற்றும் பனாமுர பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கதிர்காமம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்