இலங்கை வெளிசக்திகளின் அழுத்தங்களுக்கு அடிபணியக்கூடாது
இலங்கை வெளிசக்திகளின் அழுத்தங்களுக்கு அடிபணியக்கூடாது சுயாதீன வெளிவிவகார கொள்கையை பின்பற்றவேண்டும் என இலங்கைக்கான சீன தூதுவர் குய் ஜென்ஹாங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குறிப்பாக இலங்கையின் பொருளாதார நிலைமையை சில தரப்பினர் தங்களிற்கு சாதகமாக பயன்படுத்தமுயலும்போது இலங்கை சுயாதீன வெளிவிவகார கொள்கையை பின்பற்றவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொழும்பில் ஊடகவியலாளர்கள் சிலருடனான கருத்துபகிர்வின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு வெளிநாடுகளின் உலக நாடுகளின் உதவி அவசியம் என சில உலக நாடுகள் இலங்கைக்கு தெரிவித்துள்ளன என குறிப்பிட்டுள்ள அவர் இது தவறான கருத்து, இலங்கை மக்கள் தங்களை குறித்து நம்பிக்கை கொண்டவர்களாகயிருக்கவேண்டும்,சீனா போன்ற சகாக்களுடன் உறவுகளை பேணுவது குறித்து கவனம் செலுத்தவேண்டும் என இலங்கைக்கான சீன தூதுவர் தெரிவித்துள்ளார்.