News

மாவீரர் தினம் கொண்டாடியவர்களே கைது செய்யப்பட வேண்டியவர்கள் : பிரதான நீதவான் திலின கமகே

வடமாகாணத்தில் மாவீரர் வைபவங்கள் நடத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பொய்யான செய்தி வெளிப்படுத்தப்பட்ட சம்பவம் குறித்து குற்றப்புலனாய்வு பிரிவினர் நான்கு பேரை கைது செய்தனர்.

இது பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் எடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட மருதானையில் வசிக்கும் நாற்பத்தைந்து வயதான கெலும் ஹர்ஷன . இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மாவீரர் கொண்டாட்டங்கள் தொடர்பான பழைய தகவல்களை இம்முறை இடம்பெற்றதாக சமூக ஊடகங்கள் மூலம் சந்தேக நபர்கள் பகிந்ததாகவும் , அதன் மூலம் நாட்டிலும் பொதுமக்களிடமும் பயங்கரவாதம் சந்தேக நபர் தூண்டுதலொன்றை மேற்கொள்ள முயற்சித்துள்ளதாகவும் குற்றப் புலனாய்வு விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது என அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பில பிரபாகரன் தொடர்பில் தமது கட்சிக்காரர் எதிர்க் கருத்தை முன்வைத்துள்ளதாகவும், அது தீவிரவாதத்தை தூண்டும் செயல் அல்ல எனவும் சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

இது பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்தின் கீழ் வெளியிடப்பட்ட கருத்து மட்டுமே எனவும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இது குற்றமில்லை எனவும் தமது கட்சிக்காரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றமில்லை எனவும் கொண்டாடியவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் கொழும்பு பிரதான நீதவான் தெளிவாக தெரிவித்துள்ளார்.இதன்படி சந்தேகநபரை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.

Recent Articles

Back to top button