பேராதெனிய எலுகொட பள்ளிவாயல் அதான் விவகாரம் : பள்ளிவாயல் தலைவர் வழங்கிய விளக்கம்..

கண்டி பேராதனை எளுகொட ஹேந்தெனிய ஜும்மா பள்ளிவாயலில் ஒலிபெருக்கியில் அதான் சத்தத்தை குறைக்குமாறு முஹத்தீனுக்கு நிர்வாக சபையினரால் பணிக்கப்பட்டதாக சமூக வலைகளில் பரவும் தகவல் தொடர்பில் ஹேந்தெனிய ஜும்மா பள்ளிவாயலில் தலைவர் நஸார் ஹாஜியார் விளக்கமளித்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பள்ளிவாயலுக்கு விஜயம் செய்த பேராதெனிய பொலிஸ் நிலையத்தின் சுற்றுப்புற சூழல் பிரிவில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரி பள்ளிவாயல் ஒலிபெருக்கியில் ஒலிக்கும் அதான் சத்தம் அங்கு வசிக்கும் சிலருக்கு அசௌகரியமாக உள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே இது போன்ற முறைப்பாடுகள் பள்ளிவாயலுக்கு கிடைத்துள்ளதால் ஒலி பெருக்கி சத்தத்தை குறைத்தே வைத்துள்ளதாக அவரிடம் விளக்கமளிக்கப்பட்டதாக மடவளை நியுசுக்கு கருத்து வெளியிட்ட ஹேந்தெனிய ஜும்மா பள்ளிவாயலில் தலைவர் நஸார் ஹாஜியார் குறிப்பிட்டார்.
குறித்த அதிகாரி வாக்குமூலத்தை பெற்று சென்றுள்ள நிலையில் நேற்று தன்னை சந்திக்க வந்த பேராதெனிய பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசேதகர் குறித்த முறைப்பாடு தொடர்பில் விளக்கம் கேட்டுள்ள நிலையில் முன்னதாக கூறிய அதே விளக்கத்தை அவருக்கும் வழங்கியுள்ள பள்ளிவாயல் தலைவர், இதற்கு மேல் சத்தத்தை குறைக்க முடியாது எனவும் தேவையென்றால் சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் கூறி அனுப்பி வைத்ததாக ஹேந்தெனிய ஜும்மா பள்ளிவாயலில் தலைவர் நஸார் ஹாஜியார் மடவளை நியுசுக்கு குறிப்பிட்டார்.
பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்ட சம்பவம் உண்மை என கூறிய நஸார் ஹாஜியார் பள்ளிவாயல் நிர்வாகம் முஹத்தீனுக்கு சத்தத்தை குறைக்க பணிக்கவில்லை என கூறினார்.

