News
பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏற்பாடு செய்த பாலின அடிப்படையிலான வன்முறைகளை ஒழிப்பதற்கான நிகழ்வு – சஜித் பிரேமதாச உள்ளிட்டவர்களும் கலந்து சிறப்பித்தனர்
பாலின அடிப்படையிலான வன்முறைகளை ஒழிப்பதற்கான (GBV) 16நாள் உலகளாவிய முன்னெடுப்புக்கு ஒத்துழைப்பை நல்கும் வகையில், இலங்கை பாராளுமன்றத்தின் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு இன்று (06) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பெண் பணியாளர்கள் செம்மஞ்சள் நிற ஆடைகளை அணிந்திருந்தனர்.
இந்நிகழ்வில் இலங்கை பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இங்கு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அம்பிகா சாமுவேல் செம்மஞ்சள் நிற கைப்பட்டியை அணிவித்தார்.