News
சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல தனது பட்டப்படிப்பை நிரூபிக்க வேண்டும்.

சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல தனது பட்டப்படிப்பை நிரூபிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சவால் விடுத்துள்ளார்.
அவ்வாறு செய்யத் தவறினால் சபாநாயகர் பதவி விலக வேண்டும் என முகநூல் பதிவில் தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.
சபாநாயகர் பதிலளிக்கத் தவறினால், NPP நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

