News

“கப்துருபாய’’ தேங்காய்களை வாங்க வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசை

தற்போது நிலவும் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் இலங்கை சதொச அரிசி மற்றும் தேங்காய் நுகர்வோருக்கு குறைந்த விலையில் வழங்க நடவடிக்கை எடுத்த போதிலும் சதொச விற்பனை நிலையங்களில் அவற்றை முறையாக பெற்றுக்கொள்ள முடியவில்லை என நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர்.

சதொச ஊடாக வாடிக்கையாளர் ஒருவர் 5 கிலோ நாட்டு அரிசியை தலா 220 ரூபாவிற்கும் 3 தேங்காய் 130 ரூபாவிற்கும் கொள்வனவு செய்ய முடியும்.

எனினும் சில சதொச கடைகளில் அரிசி மற்றும் தேங்காய்கள் உரிய முறையில் கையிருப்பில் இல்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, பத்தரமுல்லையில் அமைந்துள்ள தென்னைச் செய்கை சபையின் பிரதான காரியாலயத்திற்கு முன்பாக நேற்று அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட 130 ரூபாவுக்கு தேங்காய்களை நுகர்வோருக்கு விற்பனை செய்யும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தென்னைச் செய்கை சபை நடவடிக்கை எடுத்திருந்தது.

“கப்துருபாயா” தேங்காய்களை வாங்க வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் நின்றனர்.

Recent Articles

Back to top button