News

ஜனாதிபதிக்கும் மகா சங்க உறுப்பினர்களுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து இலங்கையின் சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் விதிகள் மற்றும் கட்டளைகளை மீளாய்வு செய்து புதுப்பிப்பதற்காக கூட்டம் இடம்பெற்றது

இலங்கையின் சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் உள்ள விதிகள் மற்றும் நிலையியற் கட்டளைகளை மீளாய்வு செய்து புதுப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட விசேட குழுவின் முதலாவது கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுள்ளது.


அக்டோபர் 08 ஆம் திகதி ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் மூன்று நிகாயாக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மகா சங்க உறுப்பினர்களுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்தக் குழு நியமிக்கப்பட்டது.


புத்தசாசன, நீதி மற்றும் பொதுநிர்வாக அமைச்சுகள், பௌத்த விவகாரத் திணைக்களம் மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகள் பங்கேற்புடன் வெள்ளிக்கிழமை பிற்பகல் (அக்டோபர் 09) இக்கூட்டம் நடைபெற்றது.


புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சின் செயலாளர் பிரின்ஸ் சேனாதீர தலைமையில் இந்தக் குழு இயங்குகிறது.


ஜனாதிபதி ஊடகப் பிரிவின் தகவல்படி, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இக்குழுவிற்கு கொள்கை வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார்.


பௌத்த பிக்குகள் காவலில் வைக்கப்படும் போதும் சிறைக்கு வெளியே அழைத்துச் செல்லப்படும் போதும் அவர்களை நடத்துவது தொடர்பான தற்போதைய சிறைச்சாலை விதிகள் குறித்து கவலைகள் எழுப்பப்பட்டதை அடுத்து இந்தக் குழு அமைக்கப்பட்டது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button